இணையத்தில் லீக் ஆன மைக்ரோமேக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் விவரங்கள்

1 year ago 871

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது இன் நோட் 2 ஸ்மார்ட்போனினை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய இன் நோட் 2 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. 


இந்த நிலையில், புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போனின் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி புதிய இன் நோட் 2 ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் அமோலெட் எப்.ஹெச்.டி. பிளஸ் டிஸ்ப்ளே, 60 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்.பி. செல்பி கேமரா வழங்கப்பட இருக்கிறது. 


 மைக்ரோமேக்ஸ் இன் நோட் 2


புகைப்படங்களை எடுக்க 48 எம்.பி. பிரைமரி கேமரா, 5 எம்.பி. இரண்டாவது லென்ஸ், இரட்டை 2 எம்.பி. லென்ஸ் வழங்கப்படுகிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மற்றும் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.


முந்தைய ஸ்மார்ட்போன் போன்றே புதிய இன் நோட் 2 மாடலிலும் ஆண்ட்ராய்டு 11 ஓ.எஸ். கிட்டத்தட்ட ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவம் வழங்கும் என தெரிகிறது. இந்த மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் பிரவுன் நிறங்களில் கிடைக்கிறது.