இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க பிரபலமான குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்அப் இருக்கிறது. ஆண்ட்ராய்டு சாதனங்களிடையே சாட் டிரான்ஸ்பர் செய்வது மிக எளிமையான விஷயமாக இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டில் இருந்து ஐபோனிற்கு சாட் டிரான்ஸ்பர் செய்வது சிக்கலான காரியம் ஆகும். இந்த நிலையை விரைவில் மாற்றும் வகையில் வாட்ஸ்அப் புது அம்சத்தை உருவாக்கி வருகிறது.
சமீபத்தில் புது ஐபோன் வாங்கியவர்கள் பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து சாட் டிரான்ஸ்பர் செய்வது எளிமையாக்கும் புது அம்சத்தை வாட்ஸ்அப் உருவாக்கி வருகிறது. இதற்கான விவரங்கள் வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 22.2.74 வெர்ஷனில் இடம்பெற்று இருக்கிறது. புதிய பீட்டா வெர்ஷனில் ஆண்ட்ராய்டு சாதனத்தில் இருந்து சாட்களை இம்போர்ட் செய்வதற்கான வசதி வழங்குவது பற்றிய குறியீடு இடம்பெற்று இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
