தேவையில்லாமல் பொய் சொல்லும் உங்கள் வாழ்க்கைத் துணையை சமாளிப்பது எப்படி?

6 days ago 13

நீங்கள் பொய் பேசும் நபருடன் வாழ்க்கைத் துணையாக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் நல்லறிவை இழக்காமல் அவர்களைச் சமாளிப்பதற்கான  வழிமுறைகள் இங்கே.

By: சுதா விஜயன் | Updated at : 19 Sep 2022 04:01 PM (IST)

How To Deal With a Pathological Liar in a Relationship தேவையில்லாமல் பொய் சொல்லும் உங்கள் வாழ்க்கைத் துணையை சமாளிப்பது எப்படி?

பொய் சொல்லும் துணையை சமாளிப்பது எப்படி (stylecraze)

உங்கள் துணை எந்தக் காரணமும் இல்லாமல் பொய் சொன்னால், நீங்கள் ஒரு  திட்டமிடலை கையாள வேண்டும். மைதோமேனியா மற்றும் சூடோலாஜியா ஃபேன்டாஸ்டிகா என்றும் அறியப்படும், பொய் என்பது பொய் சொல்லும் கட்டாயப் பழக்கமாகும். சிலர் ஏன் கட்டாயமாக பொய் சொல்கிறார்கள் என்பதற்கு தனித்தனியாக வரையறுக்கப்பட்ட காரணம் இல்லை என்றாலும், அது ஆளுமைக் கோளாறுகள் அல்லது சமூக விரோத ஆளுமைக் கோளாறால் ஏற்படலாம். எதுவாக இருந்தாலும், நீங்கள் பொய் பேசும் நபருடன் வாழ்க்கைத் துணையாக இருக்கிறீர்கள் என்றால், உங்கள் நல்லறிவை இழக்காமல் அவர்களைச் சமாளிப்பதற்கான  வழிமுறைகள் இங்கே.

உங்களுடன் நீங்களே நிதானமாக உரையாடுங்கள்:

நீங்கள் செய்ய வேண்டிய முதல் உரையாடல் உங்களுடன் தான். இந்த உறவைத் தொடர விரும்புகிறீர்களா என்பதைத் தீர்மானிக்கவும்.நீங்கள் தொடர விரும்பினால், கடந்த காலத்தில் உங்கள் வாழ்க்கை துணை சொன்ன பொய்களினால், மனரீதியாகவோ  மற்றும் பண ரீதியாகவோ நீங்கள் அதிக இழப்புகளை சந்தித்து இருக்கிறீர்களா என்பதை  பாருங்கள்.

அப்படி வாழ்வில் பெரிய இழப்புக்கள் இல்லை என்றால்,உங்கள் வாழ்க்கை துணையின் பொய்யானது உங்கள் இருவரின் வாழ்க்கையை பெரிதாக எந்த விதத்திலும் பாதிக்காது. அத்தகைய தருணங்களில் மிகப் பொறுமையாக அவர் பொய் பேசும் தருணங்களில்,அந்தப் பொய்யை ஆதரிக்காமல், அதை நீங்கள் கண்டுபிடித்து விட்டதையும் கூறாமல் இருக்கும் சமயங்களில்,படிப்படியாக பழக்கத்தில் வந்த அந்த பொய்கூறும் தன்மையானது மெல்ல மெல்ல மாறும்.

உங்கள் வாழ்க்கை துணையுடன் எதிர்கால வாழ்க்கை பயணத்துடன்  ஒப்பிடும்போது நீங்கள் மேற்கொண்ட கடந்த கால வாழ்க்கை பயணத்தை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது இழப்புகளை நீங்கள் சந்திப்பீர்களேயானால் அதற்கு தக்கவாறு ஒரு முடிவை எடுங்கள். கடந்து போன காலகட்டத்தில் கஷ்ட நஷ்டங்களை நம்மால் மாற்ற முடியாது ஆனால் எதிர்காலத்தை நமக்கு தேவையானது போல மாற்றி அமைத்துக் கொள்ள முடியும்.


நீங்கள் ஒருவேளை காதலித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் மேற் சொன்ன விஷயங்கள் பொருந்தும் காதலிக்கும் இந்த தருணத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன்  திருமண உறவை தொடர போகிறீர்களா இல்லையா என்பதை தீர்மானிக்க மிகப்பெரிய சுதந்திரம் உங்களுக்கு இருக்கிறது. 


அமைதியாக இருங்கள்:


உங்கள் வாழ்க்கை துணை உங்களிடம் பொய் சொல்லும் தருணங்களில் மிக அமைதியாக அந்த பொய்யை கேட்டுக் கொள்ளுங்கள். மேலும் அதற்கு ஏதேனும் அர்த்தம் பொதிந்த காரணங்கள் இருக்கிறதா என்பதை எண்ணிப் பாருங்கள். இல்லையெனில் அந்தப் பொய்காண உங்கள் கோபத்தை வெளிப்படுத்தாமல் மேலும் அந்த பொய்யை உங்கள் வாழ்க்கை துணை தொடர விடாமல் அமைதியாக இருங்கள்.

உங்கள் வாழ்க்கை துணைக்கு அவரின் பொய்யை உணர்த்துங்கள்:


உங்கள் வாழ்க்கை துணை சுய பச்சாதாபம் அல்லது சமூக காரணங்களுக்காக   பொய் சொல்லும் தருணங்களில் அமைதியாக இருந்து விட்டு, பின்னர் மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் அவர் சொன்னது பொய் என்பது எனக்கு தெரியும் என்று ஆனாலும் தான் அதனால் கோபப்படவில்லை என்றும் நிதானமாகச் சொல்லுங்கள். அவர்கள் பொய் சொல்லும்போது நீங்கள் அதைப் பாராட்ட மாட்டீர்கள் என்பதை நிதானமாக அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.இது உங்கள் வாழ்க்கை துணையோ அல்லது காதலரோ தம்மை மாற்றிக்கொள்ள ஒரு தீர்வாக இருக்கும்.

ஊக்கத்தை நிறுத்துங்கள்: 


அவர்கள் தங்கள் பொய்களுடன் எவ்வளவு தூரம் செல்வார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். இருப்பினும்,கேள்விகளைக் கேட்டு கட்டாயப் பொய்யரை ஊக்குவிக்க வேண்டாம். அவர்களின் பொய்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது அவர்களை கோபப்படுத்துவதின் மூலமாக இல்லாமல் அவர்களுக்கு புரிதல் வரவைக்கும் படியாக நீங்கள் செயலாற்ற வேண்டும். அவர்கள் நேர்மையற்றவர்களாக இருப்பதை நிறுத்தும் வரை உரையாடலைத் தொடர விரும்பவில்லை என்பதைப் வெளிப்படையாகவும் கோபம் இல்லாமலும் அமைதியான முறையிலும் நீங்கள் உங்கள் வாழ்க்கை துணைக்கோ அல்லது காதலருக்கு தெரியப்படுத்துங்கள்

Published at : 19 Sep 2022 04:01 PM (IST) Tags: mind partner Deal Pathological Liar Relationship Yourself Keep Calm No Accusing