யோகா நல்லதுதான்… ஆனால் எப்போதெல்லாம் செய்யக்கூடாது: அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்!

3 months ago 90
  • முகப்பு
  • லைப்ஸ்டைல்
  • யோகா நல்லதுதான்… ஆனால் எப்போதெல்லாம் செய்யக்கூடாது: அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்!

யோகாவை கவனமாக செய்யாவிட்டால் சில பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதனால் அதனை எப்போதெல்லாம் செய்ய கூடாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

By: ஜான் ஆகாஷ் | Updated at : 21 Jun 2023 09:18 PM (IST)

 அவசியம் அறிந்துகொள்ள வேண்டும்!

யோகா தினம்

யோகாவின் இன்றியமையாத நன்மைகளை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும் தான். ஆனால் அதையே நாம் ஏனோ தானோ என்று செய்து விட முடியாது. யோகா என்பது பார்பதற்கு சாதாரணமாக, இலகுவாக இருக்கலாம், ஆனால் அது உடலில் ஏற்படுத்தும் மாற்றம் என்பது பெரிது. இதனால் அதையே கவனமாக செய்யாவிட்டால் சில பிரச்சனைகளும் ஏற்படும் வாய்ப்பு உண்டு. அதனால் அதனை எப்போதெல்லாம் செய்ய கூடாது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

உடல் நலம்

சோர்வாக உணர்ந்தால், உடல்நலம் சரியில்லாமல் இருந்தால், அல்லது கடுமையான மன அழுத்தம் உள்ள சூழ்நிலையில் யோகா செய்யக்கூடாது. பெண்கள் தங்கள் மாதவிடாய் காலத்தில் வழக்கமான யோகா பயிற்சிகளை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக தளர்வு நுட்பங்கள் மற்றும் பிராணயாமா செய்யலாம்.

சாப்பாடு

சாப்பிட்ட உடனே யோகா செய்ய வேண்டாம். நன்றாக சாப்பிட்ட பின் 2 முதல் 3 மணி நேரம் வரை காத்திருக்கவும். யோகா செய்த பிறகு 30 நிமிடங்களுக்கு குளிக்கவோ, தண்ணீர் குடிக்கவோ, உணவு சாப்பிடவோ கூடாது.

சிகிச்சை மேற்கொள்பவர்கள்

அறுவை சிகிச்சை அல்லது ஏதேனும் சுளுக்கு அல்லது எலும்பு முறிவுகளின் போது, ஒருவர் யோகா பயிற்சியை தவிர்க்க வேண்டும். நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு அவர்கள் யோகாவை மீண்டும் தொடங்கலாம்.

தொடர்புடைய செய்திகள்: Yoga Day 2023 LIVE: சர்வதேச யோகா தினம்- இந்தியாவில் களைகட்டிய கொண்டாட்டம்! அப்டேட்ஸ் இதோ

வானிலை

யோகாவுக்குப் பிறகு கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்யக்கூடாது. பாதகமான மற்றும் தீவிர வானிலை நிலைகளில் யோகா பயிற்சி செய்ய வேண்டாம். அதிக வெப்பம், அதிக குளிர் இருந்தால் யோகாவை தவிர்ப்பது நல்லது.

இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டாம்

யோகா செய்யும் போது காலணிகள் மற்றும் இறுக்கமான ஆடைகளை வேண்டாம். இறுக்கமான ஆடை, மேல் முதுகு, விலா எலும்பு மற்றும் நுரையீரலின் இயக்கத்தை கட்டுப்படுத்தலாம், இது முழுமையற்ற சுவாசத்தை ஏற்படுத்தும்.

குளியல்

கண்டிப்பாக யோகா செய்தால் வியற்கும். வியர்வை சொட்ட சொட்ட செய்த பின்பு, குளிக்க வேண்டியது அவசியம். ஆனால் உடனடியாக குளிக்க வேண்டாம் மற்றும் நீங்கள் குளிக்கும் அறைக்கு செல்லும் முன் உடலை உலர வைத்து பின்னர் குளிக்க செல்லவும்.

தண்ணீர்

யோகா பயிற்சிக்கு இடையில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். உங்கள் தாகத்தை சமாளிக்க இடையில் கொஞ்சம் சிப் செய்து கொள்ளலாம். அதிகப்படியான தண்ணீரைக் குடிப்பது உங்களை கனமாக உணரவைக்கும், அதோடு உங்கள் பயிற்சியைத் தடுக்கும்.

நிபுணர்கள் வழிகாட்டுதலை எடுத்துக் கொள்ளுங்கள்

இது ஒரு விதி அல்ல, யோகாவை மட்டும் தனியாக பயிற்சி செய்வதை விட, ஒரு கூட்டாளரைக் கண்டுபிடித்து ஒருவரின் வழிகாட்டுதலின் கீழ் பயிற்சி செய்வது சிறந்தது. புத்தகங்கள் அல்லது விடியோ பார்த்து செய்வது தசைகளை இழுக்க செய்யலாம். முதன்முறையாக ஆழமான யோகாக்களை செய்கிறீர்கள் என்றால் ஒருவரின் உதவியைப் பெறுவது நல்லது.

Published at : 21 Jun 2023 09:18 PM (IST) Tags: Yoga day Yoga Yoga Asanas Yoga Day 2023 How to do yoga How not to do yoga DON'Ts in yoga When to do yoga When not to do yoga