2023ம் ஆண்டுக்கான உங்கள் ட்ராவல் பட்டியலில் இந்த இடங்கள் இருக்கா?

8 months ago 220

2023ம் ஆண்டுக்கான ஆண்டு விடுமுறைகள் பட்டியல் ரெடியாகிவிட்டது.

Making Travel Plans for 2023? 5 Spots That Must be On your List 2023ம் ஆண்டுக்கான உங்கள் ட்ராவல் பட்டியலில் இந்த இடங்கள் இருக்கா?

கம்போடியா

2023ம் ஆண்டுக்கான ஆண்டு விடுமுறைகள் பட்டியல் ரெடியாகிவிட்டது. இதனோடு அடுத்து குடும்பத்துடன் எங்கெல்லாம் சென்று வரலாம் எப்போதெல்லாம் விடுமுறை எடுத்தால் சரியாக இருக்கும் என்கிற பட்டியலையும் அனைவரும் தற்போது தயார் செய்து வைத்திருப்போம்.  விடுமுறைக்கு நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினருடன் எங்கெல்லாம் செல்லலாம் என்பதற்கான பட்டியல் இதோ...


ஆண்டலியா உலகின் மிகப் பழமையான இடங்களுக்கு பெயர் பெற்றது. மேலும் இதன் கடற்கரையில் சில சிறந்த ஓய்வு விடுதிகளைக் கொண்டுள்ளது. மலிவான தங்கும் இடங்கள் மற்றும் நமது பட்ஜெட்டுக்கு ப்ரெண்ட்லியான வகையிலான இடங்களை விரும்பும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் நேரத்தை இங்கு செலவிட விரும்புவார்கள். இதுதவிர யிவ்லி மினார் மசூதி, தி ஹார்பர், கலீசி மற்றும் பெர்ஜ் ஹட்ரியன் கேட் ஆகியவை அடங்கிய சில பழங்கால இடங்கள் மற்றும் கட்டடங்கள் இந்த நகரத்தில் தவறாமல் பார்க்க வேண்டியவை.



லொசேன் ஜெனீவா ஏரியின் கரையில் உள்ள ஒரு இடைக்கால நகரம். இந்த நகரம் ஒரு காலத்தில் ரோமானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது. மேலும் அங்கிருந்து தெரியும் ஆல்ப்ஸ் மலையின் அதி அற்புதமான  வியூ உங்களுக்கு கலாச்சாரம் நிறைந்த வரலாறு மற்றும் இயற்கை அழகு இரண்டையும் அள்ளி வழங்குகிறது. மிகமுக்கியமாக ஷாவ்பெலின் கோபுரத்தின் உச்சியிலிருந்து நகரத்தின் அதி அற்புதமான காட்சியைக் காணத் தவறவிடக் கூடாது.

news reels

வெளிநாடுகள் ஓகே ஆனால் அதில் இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வு வேண்டும் என்றால் கம்போடியா நல்ல சாய்ஸ். இந்தியா இந்து தொன்மங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள வளமான கலாச்சாரம் ஆகியவற்றால் புகழ்பெற்றது. ஆனால் இந்தத் தொன்மம் இந்தியாவோடு நின்றுவிடவில்லை என்பதற்கு கம்போடியாவின் அங்கோர் வாட் மற்றும் பிற கோயில்கள் எடுத்துக்காட்டுகள். சிங்கிள் ட்ராவலர்களுக்கான பார்ட்டி பேட்கள் முதல் உயர்ரக ஹோட்டல்கள் வரை... ஒயின் மற்றும் உணவு விருப்பங்கள் மற்றும் இதர கலாச்சார தளங்கள் என இங்கே அனைத்தும், நவீன மற்றும் பழமை விரும்பி சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடமாக இந்த நகரம் உள்ளது.

உள்ளூரிலேயே ஒரு சிறந்த இடத்துக்குச் செல்ல நீங்கள் விரும்பினால், நீங்கள் சிம்லாவை தேர்ந்தெடுக்கலாம். சிம்லா "மலைகளின் ராணி" என்று அழைக்கப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆண்டின் எந்த நேரத்திலும் செல்லக்கூடிய மலை ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. சுற்றிலும் பசுமையான அதிலும் பசுமையுடன் கூடிய கோடைகாலங்களில் வெப்பநிலை மிகவும் சகிப்புத்தன்மையுடன் இருக்கும். அதே வேளையில், பனிப்பொழிவு மற்றும் வெள்ளை பனியால் மூடப்பட்ட மலைகளை விரும்புபவர்கள் குளிர்காலத்திலும் இதனைப் பார்வையிடலாம். நீங்கள் சிம்லாவிற்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டால், நகரத்தில் உள்ள புகழ்பெற்ற மால் சாலை மற்றும் வைல்ட்ஃப்ளவர் ஹால் ஆகியவை கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்

Published at : 03 Jan 2023 07:59 AM (IST) Tags: Cambodia Switzerland Turkey Geneva 2023 Tourism