பயணிகள் பாதுகாப்பில் செவர்லே என்ஜாய் ஜீரோ ஸ்டார்; ஃபோர்டு ஃபிகோ 3 ஸ்டார்!

பயணிகள் பாதுகாப்பில் செவர்லே என்ஜாய் ஜீரோ ஸ்டார்; ஃபோர்டு ஃபிகோ 3 ஸ்டார்!

சர்வதேச Global NCAP அமைப்பு, இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களின் பாதுகாப்பு அளவுகளை, \'Safer Cars for India\' என்ற பிரச்சாரத்தின் அடிப்படையில் பரிசோதனை செய்து வருகிறது. இதன் அடிப்படையில் சமீபத்தில் இவர்கள் க்ராஷ் டெஸ்ட் செய்த கார்கள், அமெரிக்க நிறுவனங்களின் தயாரிப்பான செவர்லே என்ஜாய் மற்றும் ஃபோர்டு ஆஸ்பயர். இவ்விரு கார்களின் ஆரம்ப மாடல்கள்தான் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. Adult Occupant Protection-ல், காற்றுப்பைகளே இல்லாத என்ஜாய் ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கையும், இரண்டு காற்றுப்பைகளைக் கொண்டிருக்கும் ஆஸ்பயர், 3 ஸ்டார் ரேட்டிங்கையும் பெற்றிருக்கிறது.
 
பட்ஜெட் எம்பிவியான என்ஜாய் காரின் ஆரம்ப மாடலில் எந்த பாதுகாப்பு வசதிகளும் இல்லாததுடன், விபத்து நேரத்தில் காரின் கட்டுமானமும் நிலையாக இல்லாமல் உருக்குலைந்து விடுவதை இங்கு சொல்லியாக வேண்டும். தனது அனைத்து வேரியன்ட்களிலும் பாதுகாப்புக்காக 2 காற்றுப்பைகளைக் கொண்டுள்ள ஆஸ்பயர், விபத்து நேரத்தில் முன்பக்க பயணிகளுக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கிறது. ஆனால் இந்த காரின் கட்டுமானமும் நிலையாக இல்லாமல் உருக்குலைந்து விடுவது குறிப்பிடத்தக்கது. 
 
\"\"
 
Child Occupant Protection-ல், இரண்டு கார்களுமே 2 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளன. Global NCAP அமைப்பின் டெக்னிக்கல் பிரிவு இயக்குனர் Alejandro Furas, இரண்டாம் தலைமுறை ஃபிகோ ஹேட்ச்பேக்கும், பாதுகாப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறும் சாத்தியங்கள் அதிகம் என்றார். இதற்குக் காரணமும் இருக்கிறது. ஏனெனில், ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் ஆகிய இரண்டு கார்களும், ஒரே ஃபிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுபவை என்பது கவனிக்கத்தக்கது. க்ராஷ் டெஸ்ட் முடிவுகளை வெளியிட்ட பிறகு, Global NCAP அமைப்பின் பொதுச் செயலாளர் David Ward கூறியதாவது,
 
\'\'இந்தியாவில் தயாரிக்கப்படும் வாகனங்களும், அடிப்படையான பாதுகாப்பு வசதிகளுடன் இருக்கும் என்பதற்கான சிறந்த சான்றாக இருக்கிறது ஃபோர்டு ஆஸ்பயர். ஆனால் எவ்விதமான பாதுகாப்பும் அளிக்காத கார்களும் இந்தியாவில் தயாராகின்றன என்பதை உணர்த்தி விடுகிறது செவர்லே என்ஜாய். சுருக்கமாகச் சொல்வதென்றால், என்ஜாய் எம்பிவியில் என்ஜாய் செய்யும்படியான எந்த விஷயமும் இல்லை என்பதே உண்மை. இப்படி காரில் பயணிப்பவர்களுக்குப் போதுமான பாதுகாப்பை அளிக்கத் தவறும் கார்களை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்வதற்கு, செவர்லே நிறுவனம் வெட்கித் தலைகுனிய வேண்டும்\'\' என்றார். 
 
\"\"
 
மத்திய அரசாங்கம் வெளியிட்டிருக்கு புள்ளி விபரங்களும், அதற்கு வலு சேர்க்கும்படியே அமைந்திருக்கிறது. இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளினால் மட்டுமே, சுமார் 64 ஆயிரம் பேர் ஒரு வருடத்தில் இறந்துவிடுகின்றனர் என்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது! \'\' கடந்த 2014-ம் ஆண்டில், அப்பொது விற்பனையில் இருந்த முதல் தலைமுறை ஃபோர்டு ஃபிகோ காரை, க்ராஷ் டெஸ்ட் பரிசோதனைக்கு உட்படுத்தினோம்.
 
அப்போது காரின் கட்டுமானம் ஓரளவுக்கு திடமானதாக இருந்தாலும், அது ஜீரோ ஸ்டார் ரேட்டிங்கையே பெற்றது. ஆனால் தற்போது 2017-ல் க்ராஷ் டெஸ்ட் செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை ஃபோர்டு ஃபிகோ, 3 ஸ்டார் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது, நிச்சயம் வரவேற்கத்தக்க முன்னேற்றம். ஃபோர்டு நிறுவனத்தால் முடிந்தது, அனைத்து கார் தயாரிப்பாளர்களாலும் சாத்தியம் என்றே தோன்றுகிறது\'\' என  Institute of Road Traffic Education-ன் நிர்வாக இயக்குனர் Rohit Baluja தெரிவித்துள்ளார். 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.