ஹாட் அரோமா ஆயில் மெனிக்யூர் வீட்டிலேயே செய்வது எப்படி?

ஹாட் அரோமா ஆயில் மெனிக்யூர் வீட்டிலேயே செய்வது எப்படி?

அரோமா ஆயில் மெனிக்யூர் ஸ்பாவை செய்வதற்கு நீங்கள் பார்லர் சென்று பணத்தை விரயம் செய்ய தேவையில்லை. இதனை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 

சூரிய காந்தி எண்ணெய் - 2 ஸ்பூன் 
ஆலிவ் எண்ணெய் - 2 ஸ்பூன் 
பாதாம் எண்ணெய் - 5 ஸ்பூன் 
விட்டமின் ஈ - 2 ஸ்பூன் 
ஆலிவ் எண்ணெய் - - 2 ஸ்பூன் 
தேயிலை மர எண்ணெய் - 2 ஸ்பூன் 
விட்டமின் ஈ கேப்ஸ்யூல் 
ரோஜா இதழ்கள்

ஒரு கிண்ணத்தில் எல்லா எண்ணெய்களையும் ஒன்றாக கலக்குங்கள். பிறகு விட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்து சேர்த்து நன்றாக கலக்கவும். 

\"\"

இந்த கலவையை குறைந்த தீயில் அடுப்பை வைத்து வெதுவெதுப்பாக சூடேற்றுங்கள் அல்லது மைக்ரோவேவில் வைத்தால் 8 நொடிகள் சூடுபடுத்தவும்.

பிறகு இந்த எண்ணெயில் ரோஜா இதழ்களை போடவும். சில துளி லாவெண்டர் எண்ணெயை ஊற்றவும். இதில் உங்கள் கைகளை மூழ்க வையுங்கள். வெதுவெதுப்பான சூட்டில் உங்கள் கைகளுக்கு இதமாகவும் ரத்த ஓட்டம் பாயவும் உதவும்.

சூடு ஆறியது மறுபடியும் சூடுபடுத்தி கைகளை விடவும். 20 நிமிடங்கள் ஆனதும் கைகளை வெளியே எடுத்து கைகளில் உள்ள எண்ணெயை கை முழுவதும் மசாஜ் செய்யுங்கள்.

10 நிமிடம் கழித்து கைகளை கடலைமாவு போட்டு கழுவலாம். உங்கள் கைகளா என ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் கைகள் மிருதுவாகவும் வசீகரமாகவும் இருக்கும்.

மாதம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை இந்த ஹாட் ஆயில் மெனிக்யூர் செய்தால் நகங்கள் ஆரோக்கியமாக வளரும். மசாஜ் செய்யும்போது அந்த அரோமா எண்ணெய் சருமத்தால் உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டம் அதிகரிக்கும் சுருக்கம் வராமல் கைகள் இளமையாக ஆரோக்கியமாகவும் பராமரிக்கலாம்.

 

 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.