ஹோன்டா ஜாஸ் 2018 ஹேட்ச்பேக் அறிமுகம்

ஹோன்டா ஜாஸ் 2018 ஹேட்ச்பேக் அறிமுகம்

ஜப்பானை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா புதிய தோற்றம் கொண்ட ஜாஸ் மாடல் காரினை அறிமுகம் செய்துள்ளது. 2018 ஹோன்டா ஜாஸ் ஹேட்ச்பேக் இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. 
 
ஐரோப்பாவில் 2018 ஜாஸ் முதல் முறையாக 130PS இன்ஜின் கொண்டுள்ளது. புதிய இன்ஜின் 1.5 லிட்டர் i-VTEC ஹோன்டா ஜாஸ் டைனமிக் ட்ரிம் மாடலில் வழங்கப்படும். மேலும் அனைத்து ட்ரிம் மாடல்களிலும் 102PS 1.3 லிட்டர் இன்ஜின்கள் வழங்கப்படுகிறது. 
 
முந்தைய மாடல்களை விட மேம்படுத்தப்பட்ட செயல்திறன் கொண்டுள்ள புதிய இன்ஜின் CVT டிரான்ஸ்மிஷன் மாடலில் லிட்டருக்கு 18.51 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் CVT-களிலும் அதிக செயல்திறன் வழங்கும் அளவு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக ஹோன்டா தெரிவித்துள்ளது.    
 
\"\"
 
வெளிப்புறங்களில் டைனமிக் ட்ரிம் மாடலில் மெல்லிய மற்றும் உயரமான ஸ்ப்லிட்டர்களும், முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்களில் சிறிய சிவப்பு கோடு காரின் தோற்றத்தை மேலும் அழகாக வெளிப்படுத்துகிறது. இத்துடன் டைனமிக் கிரேடுகளில் எல்இடி ஹெட்லைட், முன்பக்கம் ஃபாக் லேம்ப், டெயில்கேட் ஸ்பாயிலர் மற்றும் கிளாஸ்-பிளாக் 185 / 55 R16 அலாய் வீல்கள் வழங்கப்படுகிறது.  
 
இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை பிரத்தியேக பின்ஸ்ட்ரிப் சீட் வகைகள், லெதர் ஸ்ட்ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல் மற்றும் கியர் ஸ்டிக் இவை அனைத்தும் ஆரஞ்சு நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் புதிய ஹோன்டா ஜாஸ் முன்பதிவு நவம்பர் மாதம் துவங்கி விநியோகம் 2018 முதல் துவங்கும் என ஹோன்டா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பதிவிடப்பட்டுள்ளது.
 
புதிய டைனமிக் மாடல்கள் மற்ற நாடுகளில் வெளியிடுவது குறித்து ஹோன்டா சார்பில் எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.