சர்க்கரை அளவை குறைக்கும் மூலிகைகள்

சர்க்கரை அளவை குறைக்கும் மூலிகைகள்

வெந்தயம் :

இதைச்சமையலில் பலவிதங்களில் பயன்படுத்துவார்கள். அத்துடன் பொடியாகச்செய்து தனியாகவோ, மோருடன் சேர்த்தோ சாப்பிடலாம். தேநீராக்கிக்குடிக்கலாம். இதில் அதிக நார்ச்சத்தும் இருக்கிறது. க்ளுகோஸ் அளவைக்குறைக்கும் பல்வேறு காரணிகள் வெந்தயத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தினமும் வெந்தயம் சாப்பிடுவதால் ரத்தத்தில் க்ளுகோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது.

மஞ்சள் :

மிகவும் பழமையான காலத்திலிருந்து உபயோகத்தில் இருக்கிறது. வீக்கத்தைக் கட்டுப்படுத்தக்கூடியது என்பதாலும், வீக்கமும் நீரிழிவு நோயும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன என்பதாலும் நீரிழிவு நோயைப்பற்றிய ஆய்வுகளில் மஞ்சள் அதிகம் இடம் பிடிக்கிறது. உடல் எடையைக்குறைப்பதிலும், கொழுப்புச்சத்தைக்குறைப்பதிலும் முக்கியப்பங்காற்றுகிறது.

பட்டை :

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவில் பட்டையைச்சேர்த்துவதால் உணவுக்குப்பின் ரத்தத்தில் க்ளுகோஸ் அளவு அதிகமாகாமல் பார்த்துக் கொள்கிறது. காரமான சுவை உடையது. ஆகவே கபத்தைச்சமப்படுத்துகிறது. இன்சுலினைப்பலவிதங்களில் பயன்படுத்த தக்க விதத்தில் செயல்படுத்துகிறது. உடலின் திறனை மேம்படுத்துகிறது.

பாதாம் :

பட் டையைப் போலவே பாதாமும் கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள உணவில் சேர்க்கும் போது இரத்தத்தில் க்ளுகோஸ் அளவைக் குறைக்கும்.

பாகற்காய் :

இன்சு லின் சுரப்பைத் தூண்டுகிறது. செல்கள், க்ளுகோஸ் உறிஞ்சுவதை அதிகப்படுத்துகிறது. குடலிலிருந்து சேமிப்பாக இருக்கும் க்ளுகோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.

வல்லாரை :

வல்லாரையை சமைக்காமல் பச்சையாகத் தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு குறையும்.

காட்டு ஏலக்காய் / யானை ஏலக்காய் :

சர்க்கரை அளவு குறையும், இரவு படுக்கும் போது 2 கிராம் கா. ஏலத்தைப் பசும்பாலில் கலந்து 3 மாதம் சாப்பிட்டு, பிறகு சோதித்துப்பார்த்தால் சர்க்கரை குறைந்திருக்கும்.

சிறுகுறிஞ்சான் :

இதை சர்க்கரைக்கொல்லி என்பர். இலையை அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது பொடியாக்கிச் சாப்பிடலாம். தேநீராக்கிக் குடிக்கலாம். 2000 வருடங்களுக்கும் மேலாக இது பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

விலங்குகளை வைத்துச் செய்யும் ஆய்வுகளின்படி சிறுகுறிஞ்சான் இன்சுலின் சுரப்பைத்தூண்டுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவைக்குறைக்கிறது. இன்சுலின் சுரக்கும் இடமான கணையத்தைப் பாதுகாக்கிறது. திசுக்களைத் தூண்டி, க்ளுகோஸை உறிஞ்ச உதவுகிறது.பொன்குரண்டி (ஏகநாயகம்) :

கேரளாவில் இது அழகுக்காக அதிகம் வளர்க்கப்படுகிறது. நீரிழிவு நோயைக்கட்டுப்படுத்த உலகப்பிரசித்தி பெற்றது. கட்டுப்படுத்த முடியாத நீரிழிவு நோய் கூட கட்டுக்குள் வரும்.

நீரழிவு நோய் வந்து 10, 20 வருடம் ஆனவர்களில் நிறையப்பேருக்கு உடலமைப்பே மாறிவிடும். உடல் தேறாது. அவர்கள் பொன் குரண்டி கஷாயம் சாப்பிட்டால் பக்க விளைவுகள் வராமல் தடுக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பொன்குரண்டி கஷாயம் தயாரிக்க 1 லிட்டர் தண்ணீரில் 20 கிராம் பொன்குரண்டி வேரை சேர்த்து ½ லிட்டராகக் குறைத்து அக்கஷாயத்தை காலை, மதியம், இரவு 3 வேளையும் உணவுக்கு முன் மூன்று மாதம் சாப்பிடலாம். ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் பிற மருந்துகளையும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

குன்றிமணி :

60 வயதுக்கு மேற்பட்டவர்களும், நீரிழிவு நோய் காரணமாக பீவீணீதீமீtவீநீஸீமீuக்ஷீஷீஜீணீtலீஹ் வந்தவர்களுக்கும் கால் நரம்புகள் உணர்ச்சி குறையும். குன்றிமணி எண்ணெயை தடவி பின் குளிக்க வேண்டும். கால் எரிச்சல் குறையும், படிப்படியாக முன்னேற்றம் தெரியும்.

சுத்திகரிக்கப்பட்ட குன்றிமணிப்பவுடர் 100 கிராமை ½ லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து ஒரு ஜாடியில் ஊற்றி 48 நாட்கள் வெயிலில் வைத்து அவ்வப்போது கலந்து விட்டு, பின் காலில் தேய்த்து பிறகு குளித்தால் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும்.

திரிபலாச்சூரணம் :

நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவில் கலந்தது திரிபலா சூரணம். இது மூன்று தோ‌ஷங்களையும் சமநிலையில் வைக்கக் கூடியது. கணையத்தின் செயல்பாடுகளைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்கிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும். பக்க விளைவுகள் வராமலும் தடுக்கும்.

இவை சில வகை எளிய மூலிகை மருந்துகள் மருத்துவ ஆலோசனை பெற்று நமது உட லமைப்புக்கும், பிற நோய்கள் ஏதேனும் இருந்தால் அதற்கு தகுந்தபடியும் மருந்துகளை எடுக்கலாம்.

பரம்பரை, இளைய தலைமுறை :

முந்தைய தலை முறையில் யாருக்காவது நீரிழிவு நோய் இருந்தால் அடுத்த தலைமுறையினருக்கு வரும் வாய்ப்பு அதிகம். முந்தைய தலைமுறையில் 50 வயதில் வந்திருந்தால் அடுத்த தலைமுறையில் 10, 15 வருடம் முன்பே வரும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இன்றைய தலைமுறையினரது வாழ்க்கை முறை, உணவுப்பழக்கம் உடலுழைப்பு இல்லாத காரணமாக வெகு சீக்கிரம் நீரிழிவு நோய் வந்துவிடுகிறது. வராமல் தடுக்கவும், குறைந்த பட்சம் தள் ளிப்போடவும் ‘பஞ்சகர்மா சிகிச்சை’ ‘ரசாயன சிகிச்சை’ ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.

மகளிர் கருவுறுவதற்கு முன்பு இச்சிகிச்சை தரப்பட்டால் பிறக்கும் குழந்தை நோயிலிருந்து தப்பலாம். அல்லது தள்ளிப்போடலாம். சிறு குழந்தைப்பருவத்திலிருந்து கல்வி, பண்பாடு, ஒழுக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவது போல உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள் இத்துறையில் விழிப்புணர்வைக் கொண்டு வந்து இந்தியா வல்லரசு ஆகுவதோடு, நீரிழிவு நோய் இல்லாத நல்லரசாக ஆக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேணடும்.

-டாக்டர். ஜெ. விஜயாபிரியா

(போன் 0422-2367200, 2313188, 2313194

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.