டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன்

டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் வோடபோன்

வோடபோன் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய திட்டங்கள் வழங்கப்படுகின்றன. ரூ. 458 மற்றும் ரூ.509 விலையில் கிடைக்கும் இரண்டு திட்டங்களிலும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. வோடபோனின் புதிய அறிவிப்பு ஜியோவின் ரூ.2,599 கேஷ்பேக் திட்டத்திற்கு போட்டியளிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 

வோடபோன் ரூ.458 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. எனினும் தினமும் 250 நிமிட வாய்ஸ் கால் வீதம் வாரத்திற்கு 1,000 நிமிடங்களுக்கு வழங்கப்படுகிறது.    

ரூ.509 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ், உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் வாடிக்கையாளர்கள் தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1,000 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



வோடபோன் புதிய திட்டங்கள் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கயாளர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்றும், வரும் வாரங்களில் மற்ற வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. சமீபத்தில் வோடபோன் ரூ.38 விலையில் சலுகை திட்டம் ஒன்றை அறிவித்தது. ஒரு நாள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் 100 எம்பி டேட்டா மற்றும் 100 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. 

முன்னதாக நாட்டின் மற்றொரு டெலிகாம் நிறுவனமான ஏர்டெல், தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டத்தை அறிவித்தது. ரூ.3,999 விலையில் கிடைக்கும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 300 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 360 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய சலுகை ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதோடு, இந்த திட்டத்தில் தேசிய ரோமிங்கின் போது வாய்ஸ் கால்களும், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.