இணையத்தில் கசிந்த சுசுகி ஜிம்னி புகைப்படங்கள்: முழு தகவல்கள்

இணையத்தில் கசிந்த சுசுகி ஜிம்னி புகைப்படங்கள்: முழு தகவல்கள்

சுசுகி நிறுவனத்தின் ஜிம்னி மாடல் தயாரிப்பு ஆலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. தற்சமயம் கசிந்துள்ள புகைப்படங்கள் புதிய ஜி்ம்னி தயாரிப்பு பணிகள் நிறைவுற்றதை வெளிப்படுத்தியுள்ளது. அந்த வகையில் புதிய மாடல் சோதனை விரைவில் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுசுகி ஜிம்னி 2017 டோக்கியோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த மாடல் 2018 ஜெனீவா மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய ஜிம்னி தலைசிறந்த ஆஃப்-ரோடு மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நான்கு-வீல் டிரைவ், லேடர்-ஃபிரேம் சேசிஸ் கொண்ட ஜிம்னி முந்தைய மாடல்களை விட சிறிய ஃபூட்ப்ரின்ட் வழங்கப்பட்டிருப்பதால் அழகிய தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. தற்சமயம் வரை மூன்று கதவுகள் கொண்ட டாப் பதிப்பு மட்டும் கசிந்துள்ள நிலையில், ஐந்து கதவுகள் கொண்ட பெரிய மாடல் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய மாடலில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சுசுகி ஜிம்னி 660சிசி டர்போ-பெட்ரோல், 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டூயல்ஜெட் பெட்ரோல் மோட்டார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவற்றுடன் ஆட்டோமேடிக் மற்றும் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.