கொழுப்பை குறைக்கும் சப்போட்டா

கொழுப்பை குறைக்கும் சப்போட்டா

தித்திப்பான சப்போட்டா பழம், பல சத்துகளும் நிறைந்தது. குறிப்பாக இப்பழத்தில் உள்ள சில சத்துப்பொருட்களும் வைட்டமின்களும், ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்புத் தன்மை உடையவை.

ஒரு நூறு கிராம் சப்போட்டா பழத்தில், புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மி.கி., இரும்புச் சத்து 2.0 மி.கி., ரிபோபிளேவின் 0.03 மி.கி., நியாசின் 0.02 மி.கி., வைட்டமின் சி 6.1 மி.கி. என்ற அளவில் சத்துகள் உள்ளன.

சப்போட்டா பழத்தில் உள்ள சில சத்துப்பொருட்களும் வைட்டமின்களும், ரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும். கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்களுக்கு சப்போட்டா ஓர் இயற்கை மருந்தாகும்.

இதயம் சம்பந்தமான கோளாறுகளில் இருந்து பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்துக்கு உண்டு என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால் ரத்தபேதி குணமாகும்.தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், ஆழ்ந்த உறக்கம் உண்டாகும். ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ் குடித்து, ஒரு நேந்திரன் வாழைப்பழமும் தின்று வர, காசநோய் குணமாகும்.

மூலநோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக ரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட்டா பழம் எளிய இயற்கை மருந்து. பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டாவுக்கு உண்டு. சப்போட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்துக்கும் இது நல்ல மருந்து.

சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை, கருப்பட்டியை பொடித்து இட்டு, நன்கு காய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்சல் குணமாகும். சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்றுநோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துகள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்.

தினம் 2 சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். 

 

 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.