கே.டி.எம். இந்தியா: ஒரே காலாண்டில் இத்தனை பைக்களா?

கே.டி.எம். இந்தியா: ஒரே காலாண்டில் இத்தனை பைக்களா?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 2017-18 நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதன்படி கே.டி.எம். இந்தியா 250சிசி டியூக் மாடலில் மொத்தம் 2300 யுனிட்களை விற்பனை செய்துள்ளது. 
 
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட டியூக் 250 மாடல் அந்நிறுவனத்தின் துவக்க நிலை 200 சிசி டியூக் மற்றும் 2017 பிளாக்ஷிப் கே.டி.எம். 390 டியூக் மாடல்களுக்கு நடுவில் அமைந்துள்ளது. 2018 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒட்டுமொத்தமாக கே.டி.எம். இந்தியா 8484 பைக்களை விற்பனை செய்துள்ளது.  
 
எண்ணிக்கை குறைவாக காணப்பட்டாலும் கே.டி.எம். 250 விலை கிட்டத்தட்ட ரூ.2 லட்சம் (ஆன்-ரோடு) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்தகைய விலையிலும் மாதம் 750 யுனிட்களை கே.டி.எம். விற்பனை செய்துள்ளது. இதே ரகத்தில் மஹேந்திரா மோஜோ மாதம் 100 யுனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. 
 
\"\"
 
புதிய கே.டி.எம். 390 டியூக் தற்சமயம் வெயிட் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளதாக பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது. கே.டிஎம். விநியோகஸ்தர்களும் இந்தியா முழுக்க டியூக் 390 யுனிட்கள் ஸ்டாக் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர். சில பகுதிகளில் புக்கிங் தொகை செலுத்தினால் 10-15 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  
 
கே.டி.எம். 250 டியூக் 249 சிசி சிங்கிள்-சிலிண்டர் மோட்டார் கொண்டு 29.6 bhp மற்றும் 24 Nm பீக் டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. இத்துடன் அப்டேட் செய்யப்பட்ட ஸ்ப்லிட்-சேசிஸ் மற்றும் சஸ்பென்ஷன் செட்டப், பைபிரீ ட்வின் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்ற பிரேக்கிங் 200 டியூக் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது.   
 

 

எனினும் 250 டியூக் ஆன்டி-லாக் பிரேக் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரிமுறைக்கு பிந்தைய விலைப்பட்டியலை சமீபத்தில் வெளியிட்ட கே.டி.எம். பைக் விலைகளை சற்றே குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.