
ஐபோன் X தோற்றத்தில் ஒப்போ எஃப் 7 இந்தியாவில் வெளியானது
ஒப்போ நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று எஃப் 7 ஸ்மார்ட்போனினை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போனில் 6.23 இன்ச் ஃபுல் ஹெச்.டி. + 19:9 ரக டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. நாட்ச் மற்றும் 88% ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருப்பதால் இந்த டிஸ்ப்ளேவினை ஒப்போ சூப்பர் ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே என அழைக்கிறது.
ஒப்போ ஸ்மார்ட்போன்களில் அழகிய செல்ஃபி எடுக்க ஏதுவாக வடிவமைக்கப்படும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் 25 எம்பி செல்ஃபி கேமரா, ரியல்-டைம் ஹை டைனமிக் ரேஞ்ச் (HDR) சென்சார், செயற்கை நுண்ணறிவு பியூட்டி 2.0 அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இது முந்தைய தலைமுறை தொழில்நுட்பத்தை விட 20% மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாடிக்கையாளர்கள் அடிக்கடி பயன்படுத்தும் அம்சங்களை நினைவில் கொண்டு, புகைப்படங்களை இயற்கையாகவே அழகாக்கும். இத்துடன் செல்ஃபிக்களில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஸ்டிக்கர்களும் வழங்கப்பட்டுகிறது.

ஒப்போ எஃப் 7 சிறப்பம்சங்கள்:
- 6.23 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் 19:9 IPS டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm பிராசஸர்
- ARM மாலி-G72 MP3 GPU
- 4 ஜிபி, 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி, 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் சிம் ஸ்லாட்
- கலர் ஓஎஸ் 5.0 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 16 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
- 25 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0, HDR, சோனி IMX576 சென்சார்
- கைரேகை சென்சார்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3300 எம்ஏஹெச் பேட்டரி
ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போன் சோலார் ரெட், மூன்லைட் சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.21,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட சன்ரைஸ் ரெட் நிறத்தில் ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போன் ரூ.26,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஏப்ரல் 9-ம் தேதி முதல் ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போன் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் விற்பனை செய்யப்படுகிறது.

இத்துடன் ஸ்பெஷல் டைமன்ட் பிளாக் எடிஷன் ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரியுடன் வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.26,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தேர்வு செய்யப்பட்ட ஒப்போ ஸ்டோர்களில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒப்போ எஃப் 7 ஸ்மார்ட்போன் ஏப்ரல் 2-ம் தேதி ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் 777 ஒப்போ ஸ்டோர்களில் இந்த விற்பனை நடைபெற இருக்கிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 120 ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் ஒரு முறை ஸ்கிரீனினை இலவசமாக மாற்றிக்கொள்ளும் வசதியும் வழங்கப்படுவதாக ஒப்போ அறிவித்துள்ளது.