ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: பட்ஜெட் விலையில் அறிமுகம்

ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட்போன்: பட்ஜெட் விலையில் அறிமுகம்

ஒப்போ நிறுவனத்தின் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ A83 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஹெச்.டி.+ ஃபுல் ஸ்கிரீன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P23 சிப்செட் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 
 
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முகத்தில் உள்ள 200 முக அங்கீகார ஸ்பாட்களை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் அம்சமும் வழங்கப்பட்டுள்ளது.
 
 
 
ஒப்போ A83 சிறப்பம்சங்கள்:
 
 
- 5.7 இன்ச் 1440x720 பிக்சல் 18:9 ஹெச்.டி.+ ஃபுல்-ஸ்கிரீன் 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
- 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ P23 சிப்செட்
- மாலி G71 MP2 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீ்ட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட் சார்ந்த கலர் ஓ.எஸ். 3.2
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ், f/2.2 அப்ரேச்சர்
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்
- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- 3180 எம்ஏஎச் பேட்டரி
 

 

இந்தியாவில் கருப்பு மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் ஒப்போ A83 ஸ்மார்ட்போன் ரூ.13,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒப்போ ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளத்தில் ஜனவரி 20-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.