அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் + 300 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய திட்டம்

அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் + 300 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் புதிய திட்டம்

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமான பாரதி ஏர்டெல் 300 ஜிபி டேட்டா வழங்கும் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. ரூ.3,999 விலையில் கிடைக்கும் புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 300 ஜிபி டேட்டா சுமார் 360 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.3,999 திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், 300 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 360 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய சலுகை ஏர்டெல் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுவதோடு, இந்த திட்டத்தில் தேசிய ரோமிங்கின் போது வாய்ஸ் கால்களும், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 



ஏர்டெல் ரூ.3,999 திட்டம்:


அனைத்து உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், தேசிய ரோமிங்  மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ், 300 ஜிபி டேட்டா சுமார் 360 நாட்களுக்கு வழங்கப்படும் என ஏர்டெல் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஏர்டெல் ரூ.1,999 திட்டம்:

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 125 ஜிபி டேட்டா சுமார் 180 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங்கின் போது மேற்கொள்ளப்படும் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஏர்டெல் ரூ.999 திட்டம்:

90 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ள இந்த திட்டத்தில் 60 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிட்டெட் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், ரோமிங்கின் போது மேற்கொள்ளப்படும் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.



இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ள சலுகைகளுக்கு போட்டியாக பல்வேறு டெலிகாம் நிறுவனங்களும் புதிய சலுகை திட்டங்களை அறிவித்து வருகின்றன. ஜியோ சேவையில் ஒரு நாள் வேலிடிட்டி கொண்ட சலுகை ரூ.19-இல் துவங்கி அதிகபட்சம் சுமார் 360 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டம் ரூ.9,999 விலையில் வழங்கப்படுகிறது. 

இத்துடன் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.399 மற்றும் அதற்கும் அதிகமான தொகை செலுத்தி ரீசார்ஜ் செய்யும் போது ரூ.2,500 வரை கேஷ்பேக் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை நவம்பர் 10-ம் தேதி துவங்கி நவம்பர் 25-ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.