ஆக்சிஜனை கண்டுபிடித்த ஜோசப் பிரிஸ்ட்லி பிறந்த நாள்: மார்ச் 13-1733

ஆக்சிஜனை கண்டுபிடித்த ஜோசப் பிரிஸ்ட்லி பிறந்த நாள்: மார்ச் 13-1733

ஜோசப் பிரிஸ்ட்லி ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்சிசனைக்  கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது. இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார். கார்பன்-டை-ஆக்சைடு பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை. ஆக்சிசனை இவருக்கும் முன்னால் கார்ல் வில்லெம் சீல் என்பார் கண்டுபிடித்தார் என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

 

* 1811 - பிரித்தானியர் பிரெஞ்சுப் படைகளை லீசா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர். * 1881 - ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் தனது மாளிகைக்கு அருகில் நடந்த குண்டு வீச்சில் கொலை செய்யப்பட்டான். (ஜூலியன் நாட்காட்டியில் இது மார்ச் 1-ல் இடம்பெற்றது). * 1900 - பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகாக் குறைக்கப்பட்டது.

 

* 1908 - நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் கைது செய்யப்பட்டதால் திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது. * 1921 - மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது. * 1940 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் இடம்பெற்ற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக்கொன்றார்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.