இணையப் பாதுகாப்பில் சிங்கப்பூர் முதலிடம்... இந்தியா 23-வது இடம்!

இணையப் பாதுகாப்பில் சிங்கப்பூர் முதலிடம்... இந்தியா 23-வது இடம்!

ணையப் பாதுகாப்பில், 165 நாடுகளைக்கொண்ட சர்வதேச தர வரிசைப் பட்டியலில், இந்தியா 23-வது இடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் முதலிடம் வகிக்கிறது. 

இப்போதெல்லாம், நேரடியாக நிகழும் குற்றங்களைவிட இணைய வழி குற்றங்கள்தான் அதிக சேதத்தையும் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. நாளுக்கு நாள் இணைய வழிக் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இணையத்தில் நடக்கும் தவறுகளைக் கண்காணிக்கவும் குற்றங்களைத் தடுக்கவும் இணையப் பாதுகாப்பு மிக அவசியமாகிறது. இணையப் பாதுகாப்பு நாடுகளுக்கான பட்டியலில், மொத்தம் 165 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்தப் பட்டியலை ஐநா-வின் தொலைத்தொடர்பு முகமையின், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா, மொத்தமாக 0.683 புள்ளிகளுடன் 23-வது இடம் பெற்றுள்ளது. இதில் 0.925 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடிக்கிறது சிங்கப்பூர். இதில் 77 நாடுகள் இணைய வழியாக நடைபெறும் குற்றங்களைத் தடுப்பதில் தீவிரம் காட்டிவருகின்றன. இணையப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நாடுகளின் பட்டியலில் சிங்கப்பூர், அமெரிக்கா, மலேசியா, ஓமன், எஸ்தோனியா, மொரீசியஸ், ஆஸ்திரேலியா, ஜார்ஜியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன. இதில், உலக வல்லரசு நாடுகளில் ஒன்றாக ரஷ்யா 11-ம் இடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.