இந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹேந்திரா KUV 100 எலெக்ட்ரிக்

இந்தியாவில் சோதனை செய்யப்படும் மஹேந்திரா KUV 100 எலெக்ட்ரிக்

மஹேந்திராவின் அடுத்த எலெக்ட்ரிக் வாகனம் KUV 100 மாடலாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதற்கான ஆதாரம் வெளியாகியுள்ளது. 

அந்த வகையில் புதிய மஹேந்திரா KUV 100 எலெக்ட்ரிக் மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. எலெக்ட்ரிக் KUV 100 இந்தியாவில் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கார் இந்திய ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.  

2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் வெளியாக இருக்கும் முதல் எலெக்ட்ரிக் மாடல்களில் KUV 100 எலெக்ட்ரிக் இருக்கும் என கூறப்படுகிறது. வெளிப்புற தோற்றங்களில் அதிகப்படியான மாற்றங்கள் இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை, எனினும் புதிய இ.வி. மாடலில் எக்சாஸ்ட் பைப் காணப்படவில்லை.  

மஹேந்திரா எலெக்ட்ரிக் மாடலின் பவர்டிரெயின் சார்ந்து எவ்வித தகவலும் இல்லை என்றாலும், மஹேந்திராவின் முந்தைய எலெக்ட்ரிக் மாடல்களான E20 மற்றும் இவெரிடோ உள்ளிட்ட மாடல்களில் லித்தியம் அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுவதால் இதே போன்ற பேட்டரிகளே KUV 100 எலெக்ட்ரிக் மாடலிலும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


எலெக்ட்ரிக் மைக்ரோ கிராஸ்ஓவர் மாடலின் விலை பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கொண்ட மாடல்களை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் KUV 100 எலெக்ட்ரிக் மாடலின் விலை ரூ.10 லட்சத்தில் இருந்து துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கியர்பாக்ஸ் அட்டோமேடிக் CVT கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதே போன்ற கியர்பாக்ஸ் E20 மற்றும் இவெரிடோ மாடல்களிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

KUV 100 எலெக்ட்ரிக் மாடல் ஒரு முறை சார்ஜ் செய்தால் குறைந்தபட்சம் 140 கிலோமீட்டர் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நகரத்தில் பயணம் செய்ய ஏற்றதாக இருக்கும் ன்றும், எலெக்ட்ரிக் மாடல் என்ற வகையில் 200-250 கிலோமீட்டர் வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தற்சயம் மஹேந்திரா KUV 100 கார் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின்களை கொண்டுள்ளது. இரண்டு இன்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளதோடு இரண்டு இன்ஜின்களுக்கும் AMT ஆப்ஷன்களை வழங்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் AMT மாடலும் அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.