இந்தியா கைவிட்டாலும், வெளிநாடுகளில் வரவேற்பை பெறும் டாமினர் 400

இந்தியா கைவிட்டாலும், வெளிநாடுகளில் வரவேற்பை பெறும் டாமினர் 400

பஜாஜ் டாமினர் 400 ஸ்போர்ட்ஸ் க்ரூசர் மோட்டார்சைக்கிள் இந்தியாவை விட வெளிநாட்டினர் அதிகம் வாங்கியுள்ளனர் என சமீபத்திய பஜாஜ் அறிக்கையில் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 4500 டாமினர் மாடல்கள் விற்பனையாகி வரும் நிலையில், இந்தியாவில் 2000 வாகனங்களும், சர்வதேச சந்தையில் 2500 மாடல்களும் விற்பனையாகின்றன. 

இந்தியாவில் பஜாஜ் நிறுவனத்தின் விலை உயர்ந்த மாடலாக டாமினர் 400 இருக்கிறது. மாதம் 10,000 யுனிட்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு கிளாசிக் வாடிக்கையாளர்களை குறி வைக்கும் புதிய டாமினர் 400 இந்திய வாடிக்கையாளர்களை கவர தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இந்தியாவை தொடர்ந்து லத்தின் அமெரிக்க மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு டாமினர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சந்தைகளில் பஜாஜ் பல்சர் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா இணைந்துள்ளது. டாமினர் மூலம் கால்பதித்துள்ள பஜாஜ் வரும் மாதங்களில் ஆஸ்திரேலியா மட்டுமின்றி ஐரோப்பாவிலும் ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளது.



பஜாஜ் டாமினர் 400 ABS கொண்ட பதிப்பும், ABS  வசதி இல்லாத பதிப்பும் விற்பனை செய்யப்படுகிறது. 182 கிலோ எடை கொண்ட டாமினர் பஜாஜ் தயாரிப்பில் அதிக எடை கொண்ட மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது. ராயல் என்ஃபீல்டு ஸ்டான்டர்டு 350 டாமினரை விட 1 கிலோ மட்டுமே எடை அதிகம் ஆகும். 

பஜாஜ் டாமினர் 400 மாடலில் 373சிசி ஃபியூயல் இன்ஜெக்டெட் லிக்விட் கூல்டு KTM இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 34.5bhp மற்றும் 35NM டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டாமினர் 400 ஏ.பி.எஸ். ட்ரிம் இல்லாத மாடலின் விலை ரூ.1,41,045, ஏ.பி.எஸ். பதிப்பு ரூ.1,51,215 (ஜி.எஸ்.டி. உட்பட ஷோரூம் விலை, டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.