இந்த கேம்ஸ் எல்லாம் மொபைலில் விளையாடியிருக்கிறீர்களா?

இந்த கேம்ஸ் எல்லாம் மொபைலில் விளையாடியிருக்கிறீர்களா?

ஸ்மார்ட்போன்களில் அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் விஷயம் கேம்ஸ் தான். வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளை விடவும், ஃபேஸ்புக் லைக்குகளை விடவும் சக்தி வாய்ந்தவை இந்த கேம்ஸ். அதில் கொஞ்சம் வித்தியாசமான கேம்ஸ் சிலவற்றை பார்க்கலாம்.

பீட்டர் பேனிக்(Peter panic):

மொபைல் கேம்ஸ்-களில் முக்கியமானது பீட்டர் பேனிக். பீட்டர் என்பவர் இயக்குநர் ஆகும் கனவில் இருப்பவர். அவருக்கு  சொந்த ஊரில் தியேட்டர் ஒன்றை கொண்டுவர ஆசை. அதற்கு உதவிக்கரமாக இருக்க வேண்டியது புகழ். சின்ன சின்ன சவாலான கேம்ஸ்-ஐ எல்லாம் கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். புகழ்பெற்ற பாடல்கள் நிஜமாகவே இங்கே பாடும். ஓர் அற்புதமாக அனுபவத்துக்கு பீட்டர் சரியான சாய்ஸ்.

ப்ளே ஸ்டோர் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.turner.peterpanicgame&hl=en

த்ரீஸ்(Threes):

 இது கொஞ்சம் கடினமான கேம். ஆனால் அந்தளவு வெகுமதிகளும் (rewards) உண்டு.  4×4 வரிசையில் உள்ள டைல்ஸ்-களை நகர்த்தி நகர்த்தி 3-ன் மடங்குகள் வர வைக்க வேண்டும். அதற்கு எந்த விதமான செங்கோண திசையிலும் ஸ்வைப் பன்னலாம். ஆனால் டைல்ஸ்-கள் ஒரு இடத்தில் மட்டுமே மாறும். இதை விளையாடுவதால் எதிலும் ஒரு தொலை நோக்குப் பார்வை உருவாகக் கூடும் என்கிறார்கள். விளையாடிப் பாருங்கள்.

ப்ளே ஸ்டோர் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=vo.threes.free&hl=en

சூப்பர் மேரியோ ரன்(super mario run):

 பேரைப் படித்த உடனே ஜாலியா இருக்குல்ல. எனக்கும் தான். நிடென்டோ நிறுவனம் வழங்கும் தனித்துவம் கொண்ட இந்த கேம் அருமையான கிராபிக்ஸ், இனிமையான ஒலி, எளிமையான மோட்(mode) போன்ற பல அம்சங்களைக் கொண்டுள்ளது. trio of play modes-ம் இருக்கு. அதுமட்டுமில்லை. நண்பர்களோடு சேர்ந்து நீங்க இதை விளையாடலாம். இதை தரவிறக்கம் செய்வதால் இரண்டு லெவல்கள் உங்களுக்காக காத்திருக்கும். 

ப்ளே ஸ்டோர் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.nintendo.zara&hl=en

ஃபிஃபா மொபைல் சாக்கர்(Fifa mobile soccer):

 EA ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் எவர்க்ரீன் ஹீரோ என்றால் அது சாக்கர் தான். டாப் லெவல் கிராஃபிக்ஸ், விதவிதமான விளையாட்டு வகைமைகள் என்று எக்கச்சக்க வசதிகள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும், கைகூடிய பின் சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத கேம் இது. 

ப்ளே ஸ்டோர் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.ea.gp.fifamobile&hl=en

\"கேம்ஸ்\"

போக்கிமான் கோ(Pokemon go):

 2016-ம் ஆண்டின் பிரபலமான கேம் என்றால் இதுதான்.  நிஜ உலகையும் விர்ச்சுவல் உலகையும் இணைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கேமை, வீட்டில் இருந்தபடியே விளையாட முடியாது என்பதுதான் ஹைலைட். கொஞ்சம் கவனமாக விளையாட வேண்டிய கேம். முக்கியமாக, அளவில்லாத இணையம் இதற்குத் தேவை. 

ப்ளே ஸ்டோர் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.nianticlabs.pokemongo&hl=en

ஒன் டேப் டென்னிஸ்(One tap tennis):

எளிமையான விளையாட்டு முறை, விதவிதமான லொகேஷன், ஜாலியான வாடிக்கையாளர்கள் என ஒரே குஷி தான். டென்னிஸ் என்று பெயர் இருப்பதால் டென்னிஸ் அல்ல. ஆனால், கொஞ்சம் டென்னிஸ் மாதிரியும். விளையாடி பாருங்கள்.

ப்ளே ஸ்டோர் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.chillingo.onetaptennis.android.gplay&hl=en

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.