இன்டெக்ஸ் 4ஜி: 256 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஜியோ

இன்டெக்ஸ் 4ஜி: 256 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ஜியோ

ஜியோணி, சியோமி, அசுஸ் நிறுவனங்களை போன்றே இன்டெக்ஸ் நிறுவனமும் ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு 256 ஜிபி கூடுதல் டேட்டா வழங்க இருக்கிறது. அதன்படி ஜியோ சேவையில் ரூ.309 அல்லது அதற்கும் அதிகமான ரீசார்ஜ் செய்வோருக்கு மாதம் 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

கூடுதல் டேட்டா புதிய 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஐந்து ரீசார்ஜ் வரை வழங்கப்படும். செப்டம்பர் 4-ம் தேதி மற்றும் அதற்கு பிந்தைய தேதிகளில் துவங்கி மார்ச் 31, 2018 வரை கூடுதல் டேட்டா சலுகையை பெற முடியும். முன்னதாக சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் இந்த சலுகை வழங்கப்பட்ட நிலையில், இம்முறை இன்டெக்ஸ் சாதனங்களுக்கும் வழங்கப்படுகிறது.

இன்டெக்ஸ் அக்வா 4.0 4ஜி, அக்வா 4ஜி மினி, அக்வா அமேஸ் பிளஸ், அக்வா பவர் IV, அக்வா பிரைம் 4ஜி, அக்வா ப்ரோ 4ஜி, அக்வா ஸ்டிராங் 5.1 பிளஸ், அக்வா டிரென்ட் லைட், எலைட்-இ1, எலைட்-இ7, அக்வா செல்ஃபி, அக்வா எஸ்1, அக்வா லயன்ஸ் 3, அக்வா ஸ்டைல் III, அக்வா லன்ஸ் 2, அக்வா 5.5 VR பிளஸ், அக்வா நோட் 5.5, அக்வா செனித், அக்வா கிளவுட் கியூ11 மற்றும் கிளவுட் ஸ்டைல் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

\"\"

முன்னதாக வெளியான தகவல்களில் அதிவேக மொபைல் டேட்டா டவுன்லோடு வேகம் வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. 

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் மைஸ்பீடு செயலி ஆகஸ்டு மாத மொபைல் டேட்டா டவுன்லோடு வேகம் வழங்கிய நிறுவனங்ள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மொபைல் டேட்டா டவுன்லோடு வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து மூன்று மாதங்களாக முன்னிலையில் இருந்து வருகிறது. ஆகஸ்டு மாத நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டவுன்லோடு வேகம் 18.331 Mbps ஆக இருந்தது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.