இலவச ஜியோ பீச்சர்போன்: புதிய விதிமுறைகளை அறிவிக்கும் ஜியோ?

இலவச ஜியோ பீச்சர்போன்: புதிய விதிமுறைகளை அறிவிக்கும் ஜியோ?

ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் வாங்குவோர் செலுத்தும் முன்பணத்தை பெறுவதற்கான விதிமுறைகளை விரைவில் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் செலுத்திய முன்பணத்தை பெற கைப்பேசியை மூன்று ஆண்டுகளுக்குள் ஒப்படைக்க வேண்டும் என கூறப்படுகிறது. 
 
புதிய விதிமுறைகள் சார்ந்த அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், ஜியோபோனிற்கான பீட்டா டெஸ்டிங் ஆகஸ்டு 15-ம் தேதி முதல் துவங்கியது. ஜியோபோன் வாங்க விரும்புவோர் ஆகஸ்டு 24-ம் தேதி முதல் முன்பதிவு செய்யலாம். இதுகுறித்து ஜியோ தரப்பில் இருந்து எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை. 
 
ஜியோபோன் வாங்க விரும்புவோர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பணமாக ரூ.1,500 செலுத்த வேண்டும். மேலும் மாத ரீசார்ஜ் ரூ.153 செலுத்த வேண்டும், இதனால் புதிய பீச்சர்போனிற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. புதிய ஜியோபோன் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க உதவியாக இருக்கும் என டெலிகாம் சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
 
\"\"
 
புதிய ஜியோ 4ஜி பீச்சர்போன் வாங்கும் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.1,500 முன்பணம் மற்றும் மாதம் ரூ.164 செலுத்தவர். இதுவரை டெலிகாம் சேவைகளை பயன்படுத்த இந்தியாவில் ஒருவர் ரூ.100 செலுத்தி வரும் நிலையில், ஜியோ புதிய திட்டம் அவர்களிடம் இருந்து ரூ.153 கட்டணமாக பெற முடியும் என சமீபத்திய கோல்டுமேன் சேக்ஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு ஜியோ சேவைகளை வாடிக்கையாளர் தொடர்ந்து பயன்படுத்துவர். 
 
இந்தியாவில் ஒரு நெட்வொர்க் மட்டும் பயன்படுத்தக் கூடிய கைப்பேசிகளை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் அதிக விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள் என்பதால் ஜியோ தொடர்ச்சியாக இலவசங்களை வழங்க வேண்டும்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.