ஈரமான கூந்தலை உதிராமல் பராமரிப்பது எப்படி?

ஈரமான கூந்தலை உதிராமல் பராமரிப்பது எப்படி?

கூந்தலைப் பராமரிக்க பெண்கள் படும்பாடு. ரொம்பவே கஷ்டமான விஷயம் தான். அதிலும் பார்ட்டி, கொண்டாட்டங்கள் என்று வெளியில் கிளம்பும்போது, அவசர அவசரமாக தலைக்குக் குளித்து, அதைக் காயவைத்து ஹேர் ஸ்டைல் செய்து கொண்டு கிளம்புவதற்குள் அவர்களும் ஒருவழியாகி, உடனிருக்கும் நம்மையும் ஒருவழியாக்கி விடுவார்கள்.

இதுபோன்று அவசரமாகக் கிளம்பும்போது, எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று தெரியாமலே், எப்படியாவது கிளம்பினால் போதும் என்று நினைத்துவிடுகிறோம். தலையில் இருக்கும் முடி உதிரும்போது தான், செய்த தவறு நினைவுக்கு வரும்.

இதுபோன்ற சிரமமான நேரங்களில் செய்யும் தவறுகளில் இருந்து, தலைமுடி சேதமடையாமல் எப்படி காப்பது? அதற்கும் சில வழிமுறைகள் உண்டு. அவற்றைப் பின்பற்றினால் போதும். எளிமையாக தலைமுடி சேதம் ஆகாமல் தப்பித்துவிட முடியும்.

குளித்து முடித்தபின்பு தான் தலைமுடியைப் பற்றிய கவலையே நமக்கு வருகிறது. ஆனால் குளிக்கும் போதே கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டும். ஷாம்பு போட்டு தலையை அலசியதும் நல்ல கன்டிஷ்னரைப் பயன்படுத்த வேண்டும்.* குளித்து முடித்து வந்தபின் ஸ்டைலிங் சீரம் பயன்படுத்த மறக்காதீர்கள். சீரம் தடவுவதன் மூலம் தலைமுடி சிக்கல் விழாமல் இருக்கும்.

* தலையைத் துவட்டும் போது, டவலால் அழுத்தித் துவட்டக்கூடாது. ஈரமான கூந்தலை அழுத்தித் துவட்டும் போது, முடி உதிர்தல் அதிகமாகும்.

* டிரையர் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள். முடிந்தவரையிலும் கைவிரல்களால் கோதிவிட்டு, காற்றில் உலர விடுங்கள்.

* அடுத்து நீங்கள் முக்கியமாக செய்ய வேண்டியது, ஈரத்தலைமுடியைச் சீப்பால் சீவவே கூடாது. அப்படி சீவும்போது முடி உதிர்தல் அதிகமாகும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.