எண்ணைக் கசிவை உறிஞ்சும் ஸ்பாஞ்ச்..!

எண்ணைக் கசிவை உறிஞ்சும் ஸ்பாஞ்ச்..!

கடலில் எண்ணெய்க் கசிவை உறிஞ்சும் புதிய வகை ஸ்பாஞ்சை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

 

அமெரிக்காவின் ஆர்கோனே தேசிய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த OLEO எனப்படும் ஸ்பாஞ்சானது இயற்கை பேரிடர் , எண்ணெய் டேங்கர்கள் வெடித்துச் சிதறும்போது ஏற்படும் கசிவை உறிஞ்ச பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மெத்தை விரிப்பு போல் இருக்கும் இந்த ஸ்பாஞ்சை எண்ணெயைப் பிழிந்த பிறகு மீண்டும் பயன்படுத்தலாம். நியூஜெர்சி நகரில் உள்ள தேசிய எண்ணை சுத்திகரிப்பு நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் டீசல், கச்சா எண்ணைப் போன்றவற்றை வெற்றிகரமாக உறிஞ்சியது. முதற்கட்டமாகத் துறைமுகப் பணிகளுக்காக OLEO ஸ்பாஞ்ச் விற்பனை செய்ய ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.