எலும்புகளின் பலவீனத்தை தடுக்கும் உணவுகள்

எலும்புகளின் பலவீனத்தை தடுக்கும் உணவுகள்

உடலில் உள்ள எலும்புகளின் வலுமையை அதிகரிக்க கால்சியம் சத்துக்கள் மிகவும் அவசியமாகும்.

இந்த கால்சியம் சத்துக்கள் நம் உடம்பில் குறைந்து விட்டால், எலும்புகள் பலவீனம் அடைவதோடு, ரத்த செல்களின் உருவாக்கத்திலும் பல பிரச்னைகள் ஏற்படும்.

இத்தகைய குறைபாடுகளை போக்க கால்சியம் மற்றும் விட்டமின் D நிறைந்த உணவுகளை சாப்பிடுவது தான் ஒரே தீர்வாகும்.

பால் மற்றும் தயிர்

பால் மற்று தயிரில் கால்சியம் சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், தினமும் ஒரு டம்ளர் பால் குடிக்க வேண்டும்.

மருத்துவ ஆலோசனையின் படி, புரோட்டீன் பவுடர் கலந்தும் பால் குடிக்கலாம்.

மேலும் முட்டை, வெண்ணெய் போன்ற உணவுகளிலும் கூட புரதத்துடன் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.

உலர் அத்திப்பழம்

உலர் அத்திப்பழத்தில் கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் வளமாக உள்ளது.

எனவே ஒருநாளைக்கு 2 அல்லது 3 உலர் அத்திபழ துண்டுகளை சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கலாம்.

பாதாம் மற்றும் பிஸ்தா

பாதாம் மற்றும் பிஸ்தா போன்ற பருப்புகளில், நம் உடலுக்குத் தேவையான தாது உப்புகளுடன் கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களும் ஏராளமாக நிறைந்துள்ளது.

கருப்பு உளுந்து

கருப்பு உளுந்து, கொள்ளு, ராகி மற்றும் சோயாபீன்ஸ் போன்ற உணவுகளிலும் கால்சியம் சத்துக்கள் அதிகமாக உள்ளது.

எனவே தினமும் நம்முடைய உணவில் இந்த பொருட்களை கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.