ஏலத்தில் விற்பனையான 2019 முதல் ஃபோர்டு மஸ்டாங்

ஏலத்தில் விற்பனையான 2019 முதல் ஃபோர்டு மஸ்டாங்

அமெரிக்காவின் அரிசோனாவில் கடந்த வாரம் நடைபெற்ற பாரெட் ஜாக்சன் ஏலத்தில் 2019 ஃபோர்டு மஸ்டாங் புல்லிட் 300,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,91,50,500) விற்பனை செய்யப்பட்டுள்ளது.
 
2018 புல்லிட் மாடலில் 475 பி.ஹெச்.பி. பவர் மற்றும் சத்தமான எக்சாஸ்ட், மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதே ஏலத்தில் ஃபோர்டு ஜி.டி (GT) சூப்பர் கார் ஏலத்தில் விடப்பட்டது. ஃபோர்டு சூப்பர் கார் 25,00,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.15,95,76,250) விற்பனை செய்யப்பட்டது.
 
டெட்டராயிட் ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபோர்டு மஸ்டாங் டார்க் ஹைலேண்டு கிரீன் எக்ஸ்டீரியர் மற்றும் பிளாக் வீல்ஸ் கொண்டு அதிக செயல்திறன் கொண்டிருக்கிறது. ஃபோர்டு மற்றும் மெக்குயின் எஸ்டேட் வழங்கியிருக்கும் 2019 மஸ்டாங் விற்பனையில் கிடைக்கும் தொகை தொண்டு காரியங்களுக்கு செலவிடப்பட இருக்கிறது.
 
 
ஃபோர்டு மஸ்டாங் புல்லிட் 5.0 லிட்டர் V8 மஸ்டாங் ஜி.டி. இன்ஜின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜின் 475 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 569 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த இன்ஜின் மணிக்கு 163 மைல் (மணிக்கு 262 கிலோமீட்டர்) வேகத்தில் செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது.
 
ஃபோர்டு மஸ்டாங் வெளிப்புறத்தை மேட்ச் செய்யும் வகையில் உள்புறத்தில் சப்டைள் கிரீன் மற்றும் குரோம் அக்சென்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புத்தம் புதிய கருப்பு நிற லெதர் ரிகாரோ சீட், ஹெட்ரெஸ்ட்களில் பச்சை நிற ஸ்டிட்ச் செய்யப்பட்டுள்ளது. புல்லிட் எலாக்ட்ராணிக்ஸ் அம்சங்களில் வாடிக்கையாளர்கள் நேவிகேஷன், மெமரி சீட், மேம்படுத்தப்பட்ட சவுண்டு சிஸ்டம் மற்றும் அசார்டெட் டிரைவர் அசிஸ்ட்களை தேர்வு செய்யலாம்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.