ஐ.ஓ.எஸ். 11 அம்சங்கள்: நல்லதா, கெட்டதா ?

ஐ.ஓ.எஸ். 11 அம்சங்கள்: நல்லதா, கெட்டதா ?

ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளம் வெளியான சில நாட்களிலேயே முதல் அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. ஐ.ஓ.எஸ். 11.0.1 அப்டேட் சில பிழை திருத்தஙகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.    

இந்த அப்டேட் மூலம் மைக்ரோசாஃப்ட் இமெயில் அக்கவுண்ட்களில் இருந்து மெசேஜ் அனுப்ப முடியாமல் இருந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பிழை அவுட்லுக்.காம் மற்றும் ஆஃபீஸ் 365 பயனர்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது கோளாறு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.  

எனினும் புதிய ஐ.ஓ.எஸ். 11.0.1 இயங்குதளத்திற்கு அப்டேட் செய்யும் போது இந்த பிழை சரி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளத்திற்கு அப்டேட் செய்ய ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- ஜெனரல் -- சாஃப்ட்வேர் அப்டேட் ஆப்ஷன்களை கிளிக் செய்ய வேண்டும்.   

முதல் முறையாக மின்னஞ்சல் பிழை சரி செய்யப்பட்டிருந்தாலும், இன்னும் பல்வேறு அப்டேட்கள் மற்றும் பிழை திருத்தங்கள் உள்ளிட்டவை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வென்மோ போன்ற போமென்ட் அம்சம் உள்ளிட்டவற்றை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. 

\"\"

ஐ.ஓ.எஸ். 11 நன்மைகள்:


சிரி:

ஆப்பிள் நிறுவனத்தின் தனிப்பட்ட உதவியாள் சேவையான சிரி பல்வேறு மொழிகளை மொழிபெயர்க்கும் வசதி கொண்டுள்ளது. குறிப்பிட்ட மொழிகளை சரியாக உச்சரிக்கவில்லை என்றாலும் டிஸ்ப்ளேவில் வார்த்தைகளை சரியாக பார்க்க முடியம். 

லைவ் போட்டோஸ்:

புதிய இயங்குதளத்தில் லைவ் போட்டோக்களை எடிட் செய்ய முடியும். இத்துடன் பவுன்ஸ், லூப் மற்றும் பல்வேறு அம்சங்களை சேர்க்க முடியும். இதனால் புகைப்படம் எவ்வாறு காட்சியளிக்கும் என்பதை பார்க்க முடியும். 

ஆப் ஸ்டோர்:

புதிய இயங்குதளத்தில் ஆப் ஸ்டோர் பெரும்பாலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இம்முறை அதிக மேம்படுத்தக்கூடிய வகையிலும், கேம்களையும் கொண்டுள்ளது. இத்துடன் டேப் ஹைலைட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்கிரீன்ஷாட்:

ஐ.ஓ.எஸ். 11 இயங்குதளத்தில் ஸ்கிரீன்ஷாட்களுக்கு புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டதும் அவற்றை டேப் செய்து டெக்ஸ்ட் மற்றும் வரைப்படங்களை சேர்க்க முடியும்.  

மற்ற அம்சங்கள்:

பல்வேறு இதர அம்சங்களை பொருத்த வரை பயன்படுத்தாத செயலிகளை தாணாக ஆஃப்லைனில் எடுக்கும் வசதி, கண்ட்ரோல் சென்டரை மாற்றி வடிவமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

\"\"

ஐ.ஓ.எஸ். 11 தீமைகள்:

நோட்டிபிகேஷன்:

லாக் ஸ்கிரீனில் நோட்டிபிகேஷன்களில் ஆப்பிள் சரிவரி வழங்க தவறியுள்ளது. வழக்கமான நோட்டிபிகேஷன்களை கிளியர் செய்ய இடதுபுறமாக ஸ்வைப் செய்வோம், ஆனால் இம்முறை இடது புறம் ஸ்வைப் செய்தால் கேமரா செயலி லான்ச் ஆகிறது. 

நியூஸ் மற்றும் மியூசிக்:

நியூஸ் மற்றும் மியூசிக் செயலி அதிகம் மேம்படுத்தப்பட்டதாக காட்சியளிக்கவில்லை. புதிய செயலியில் ஸ்பாட்லைட் டேப் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டேப் எடிட்டர் தேர்வு செய்த தகவல்களும், மியூசிக் செயலியில் ப்ரோஃபைல் செட்டப் செய்வது மற்றும் பிளேலிஸ்ட்களை பகிர்ந்து கொள்ளும் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது. 

குரூப் ஃபேஸ்டைம்:

ஆப்பிள் ஃபேஸ்டைம் செயலியில் க்ரூப் காலிங் வசதி இம்முறையும் சேர்க்கப்படவில்லை.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.