காஸ்மெடிக் மாற்றங்களுடன் யமஹா YZF-R3 அறிமுகம்

காஸ்மெடிக் மாற்றங்களுடன் யமஹா YZF-R3 அறிமுகம்

ஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா மேம்படுத்தப்பட்ட YZF-R3 மாடலை காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகமாகியுள்ளது. 2018 ஃபுல்லி ஃபேர்டு மாடல் அமெரிக்காவில் பிப்ரவரி 2018-இல் விற்பனைக்கு வரயிருக்கிறது. 

புதிய மேம்படுத்தப்பட்ட 2018 யமஹா YZF-R3 மாடல் டீம் யமஹா புளூ, ரேவன் மற்றும் விவிட் வைட் நிறங்களில் கிடைக்கிறது. புதிய YZF-R3 மாடல் இந்தியாவில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஸ்மெடிக் மாற்றங்களை தவிர 2018 YZF-R3 மாடல் யூரோ -IV எமிஷன் கட்டுபாடுகளை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் BS-IV கட்டுபாடுகளுக்கு நிகரானதாகும். வடிவைப்புகளை பொருத்த வரை முந்தைய மாடல்களை போன்றே புதிய மாடலும் காட்சியளிக்கிறது.



2018 யமஹா YZF-R3 மாடலில் 321 சிசி பேரலெல் டுவின், ஃபியூயல் இன்ஜெக்டெட், லிக்விட் கூல்டு இன்ஜின் கொண்டுள்ளது. இந்த இன்ஜின் 41.3bhp, 29.6Nm செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டுள்ளது.

அமெரிக்காவில் புதிய யமஹா YZF-R3 மாடல் ABS மற்றும் ABS இல்லாத மாடல்களில் கிடைக்கிறது. இந்தியாவிலும் YZF-R3 ABS கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற உபகரணங்களை பொருத்த வரை தற்சமயம் விற்பனையாகும் மாடலில் வழங்கப்பட்டதை போன்றே புதிய YZF-R3 மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. 

சஸ்பென்ஷன் அம்சங்களை பொருத்த வரை முன்பக்கம் 41 மில்லிமீட்டர் கயாபா ஃபோர்க் மற்றும் பின்புறம் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன்களை கொண்டுள்ளது. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் அம்சங்களை பொருத்த வரை எவ்வித மாற்றங்களும்
மேற்கொள்ளப்படவில்லை.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.