குறைந்த விலையில் மஹேந்திரா மோஜோ: முன்பதிவுகள் துவக்கம்

குறைந்த விலையில் மஹேந்திரா மோஜோ: முன்பதிவுகள் துவக்கம்

இந்தியாவில் வெளியிட விலை குறைந்த மோஜோ மாடல் தயாரித்து வருவதாக தகவல் வெளியானது. புதிய மோஜோ மாடல் சோதனை செய்யப்படும் புகைப்படங்களும் இணையத்தில் வலம் வந்தது. புதிய மாடல் மோஜோ UT300 என அழைக்கப்படுகின்றது. 
 
இந்தியாவில் சில விற்பனையாளர்கள் ரூ.5000 முன்பணம் செலுத்தி புதிய மாடலை முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய மோஜோ UT300 விலை ரூ.1.3 முதல் ரூ.1.4 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட இருக்கும் மோஜோ UT300 அடுத்த மாத வாக்கில் வெளியிடப்பட இருக்கிறது. மோஜோ UT300 கார்ப் வெர்ஷன் 2016-ம் ஆண்டு முதல் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், புதிய புகைப்படங்களில் மோட்டார்சைக்கிள் சார்ந்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 
 
 
புதிய மோஜோ UT300 கார்ப் மாடலில் 295-சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர் 8000 ஆர்.பி.எம்., 30 என்.எம். டார்கியூ 5500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 182 கிலோ ஆகும்.
 
இதுதவிர புதிய மாடலின் முன்பக்கம் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டான்டர்டு மாடலில் பைரெலி டையப்ளோ ரொசோ 2 ரப்பர் டையர் வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி கருப்பு நிற ட்வின் பார், ஒற்றை பக்க எக்சாஸ்ட் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. 
 
மஹேந்திரா மோஜோ ஸ்டான்டர்டு மாடல் (XT300) விலை 1.7 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் நிலையில் புதிய மாடலின் விலை ரூ.30,000 - ரூ.35,000 வரை குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.