
குழந்தைகளுக்கு சத்தான ராகி - வாழைப்பழ பிரெட்
தேவையான பொருட்கள் :
ராகி மாவு - 50 கிராம்
கோதுமை மாவு - 50 கிராம்
சின்ன சைஸ் வாழைப்பழம் - 4
பேக்கிங் பவுடர் - ஒன்றரை டீஸ்பூன்
பேக்கிங் சோடா - கால் டீஸ்பூன்
உப்பு - கால் டீஸ்பூன்
ஜாதிக்காய்ப் பொடி - ஒரு டீஸ்பூன் (விருப்பப்பட்டால் மட்டுமே)
தேன் - கால் டீஸ்பூன்
தயிர் - 100 மில்லி
ஆலிவ் ஆயில் - 50 மில்லி
செய்முறை :
* வாழைப்பழத்தை நன்றாக மசித்து கொள்ளவும்.
* ராகி மாவையும், கோதுமை மாவையும் ஒன்றாகக் கலந்து நன்கு சலித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் இந்த மாவை போட்டு அதனுடன் உப்பு, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், ஜாதிக்காய்ப் பொடி சேர்த்துக் கலந்து தனியாக வைக்கவும்.
* தயிரை நன்கு கடைந்து, அதனுடன் ஆலிவ் ஆயில், தேன் கலந்து மசித்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். தயிரில் துளி கூட கட்டிகள் இல்லாதவாறு கடைய வேண்டும்.
* இந்த தயிர் கலவையைப் பிசைந்து வைத்துள்ள மாவோடு சேர்த்துக் கலந்து கட்டிகள் இல்லாமல் நன்கு பிசையவும்.
* பேக்கிங் அவனை 180 டிகிரிக்கு பத்து நிமிடம் ஹீட் செய்யவும்.
* இனி கேக் செய்யும் பேனை எடுத்து அதில் சிறிது எண்ணெய் தடவி, மாவு - தயிர் கலவையை பேனில் ஊற்றி சமமாக்கவும். இதனை பேனின் மத்தியில் உள்ள ரேக்கில் வைத்து கதவை மூடி நாற்பது நிமிடம் வேக விடவும்.
* கேக் வெந்து மேல் பகுதி லேசாக பிரவுன் நிறத்தில் உப்பி வரும் போது, கதவை திறந்து டூத் பிக்கால் கேக் நடுவே குத்திப் பார்க்கவும். டூத் பிக்கில் கேக் ஒட்டாமல் வந்தால், வெந்துவிட்டது என்று அர்த்தம். வெளியே வைத்து ஐந்து நிமிடம் ஆற விடவும். பேன் முற்றிலும் சூடு ஆறியதும், மெதுவாக கேக்கை எடுத்துப் பரிமாறலாம்.
* ஒரு டப்பாவில் போட்டு மூடி ஃப்ரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது சாப்பிடலாம்.
* ராகி பனானா பிரெட் ரெடி.