கூகுள் பிளே ஸ்டோர் செயலிகளை பாதித்த புதிய ஆட்வேர்

கூகுள் பிளே ஸ்டோர் செயலிகளை பாதித்த புதிய ஆட்வேர்

கூகுள் பிளே ஸ்டோரில் சுமார் 300-க்கும் அதிகமான செயலிகள் ஆட்வேர் மூலம் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக 800-க்கும் அதிகமான செயலிகளில் சேவியர் எனும் மால்வேர் பாதித்தது. ஒரே மாதத்தில் மட்டும் பிளே ஸ்டோரில் சுமார் மூன்றாவது முறையாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 
 
புதிய ஆட்வேர்கள் ஆண்ட்ராய்டு செயலிகளில் நுழைந்து, மூன்றாம் தரப்பு நிறுவனங்களிடம் விளம்பரங்களை பெற்று, பின் வாடிக்கையாளர்கள் அவற்றை கிளிக் செய்ததாக கூறி வருவாய் ஈட்டி வருகின்றன. இறுதிவரை வாடிக்கையாளருக்கு பாதிப்பு தெரிந்திராத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆட்வேர் ஸ்மார்ட்போன் பேட்டரியை அதிகம் எடுத்துக் கொள்வதோடு செல்லுலார் டேட்டாவையும் எடுத்துக் கொள்கிறது.
 
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களில் பாதிக்கப்பட்ட செயலிகள் ஒரே இரவில் மட்டும் 3000 விளம்பரங்களுக்கு கோரிக்கை விடுத்து, போலியாக 169 விளம்பரங்களை கிளிக் செய்துள்ளது தெரியவந்துள்ளது. பிளே ஸ்டோரில் 40 லட்சம் முதல் 1.4 கோடி பேர் இன்ஸ்டால் செய்துள்ள சுமார் 300க்கும் அதிகமான செயலிகளை இந்த ஆட்வேர் பாதித்துள்ளது.  
 
போலி விளம்பரங்களை கண்டறியும் இசங்கா நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் புதிய ஆட்வேர் குறித்து கூகுளிடம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு நடைபெற்ற டெவலப்பர் நிகழ்வில் செயலிகளை பாதிக்கும் பிரச்சனை மற்றும் இவற்றை கூகுள் எவ்வாறு சரி செய்ய இருக்கிறது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.