சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.9000 வரை விலை குறைப்பு

சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.9000 வரை விலை குறைப்பு

சாம்சங் நிறுவனத்தின் இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி A5 (2017) மற்றும் A7 (2017) மாடல்களின் விலை கடந்த இரண்டு மாதங்களில் இரண்டாவது முறையாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கேலக்ஸி A5 (2017) மற்றும் A7 (2017) ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.28,990 மற்றும் ரூ.33,490க்கு அறிமுகம் செய்யப்பட்டது. 

அந்த வகையில் தற்சமயம் இவற்றின் விலையில் ரூ.4000 வரை குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து மொத்தம் ரூ.9000 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி A5 (2017) மற்றும் A7 (2017) ஸ்மார்ட்போன்கள் முறையே ரூ.17,990 மற்றும் ரூ.20,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களும் இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆகஸ்டு மாத வாக்கில் இவற்றின் விலை ரூ.5000 குறைக்கப்பட்டது. 

சாம்சங் கேலக்ஸி A5 (2017) மற்றும் A7 (2017) மாடல்களில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி (IP68) வழங்கியதை தொடர்ந்து இந்த வசதியை பெறும் முதல் கேலக்ஸி A சீரிஸ் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்றது. இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் சாம்சங் கிளவுட் ஸ்டோரேஜ், செக்யூர் ஃபோல்டர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டன. இதே அம்சங்கள் சாம்சங் கடந்த ஆண்டு வெளியிட்ட நோட் 8 சாதனங்களிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

\"\"

இந்த ஸ்மார்ட்போன்கள் டூயல் சிம் ஸ்லாட் மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளத்துடன் வெளியிடப்பட்டது. சாம்சங் கேலக்ஸி A7 (2017) ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 1.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் பிராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் 16 எம்பி பிரைமரி கேமரா, 16 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9 அப்ரேச்சர் மற்றும் ஃபுட் போட் மற்றும் இதர கேமரா ஃபில்ட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கான விலை குறைப்பு சரியாக பண்டிகை காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதால் இவற்றின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.