சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் வெளியீட்டு விவரம்

சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் வெளியீட்டு விவரம்

சுசுகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் 2017 ஃபிரான்க்ஃபுர்ட் மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விரைவில் இந்த கார் ஐரோப்பிய சந்தைகளிலும் அதன் பின் மற்ற நாடுகளில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சுசுகி ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் டர்போ சார்ஜ்டு இன்ஜின் முதல் முறையாக வழங்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை ஹேட்ச்பேக் மாடல்களில் 1.6 லிட்டர் இன்ஜின் வழங்கப்பட்ட நிலையில் இம்முறை 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் மணிக்கு அதிகபட்சம் 210 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என்றும் 8.1 நொடிகளில் மணிக்கு 0-100 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் என சுசுகி தெரிவித்துள்ளது. 1.4 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் 138bhp மற்றும் 5,500rpm செயல்திறன் 230Nm இல் 2,500-3,500rpm செயல்திறன் கொண்டிருக்கிறது. இந்த இன்ஜினில் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய சுசுகி ஸ்விஃப்ட் முந்தைய மாடலை விட 80 கிலோ எடை குறைவாகவும், வழக்கமான ஸ்விஃப்ட் மாடல்களை விட 50 மில்லிமீட்டர் நீளமாகவும் உள்ளது. இதன் வீல்பேஸ் அகலம் 20 மில்லிமீட்டர் மற்றும் 40 மில்லிமீட்டர் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் புதிய சஸ்பென்ஷன் மற்றும் ரிவர்ஸ்டு முன்பக்க பம்ப்பர், புதிய கிரில் மற்றும் முன்பக்க ஸ்ப்லிட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் 17-இன்ச் டைமண்ட்-கட் அலாய் வீல் மற்றும் ஸ்போர்டி பிளாக் டிஃப்யூசர், எக்சாஸ்ட் பைப்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்புறங்களில் ஸ்விஃப்ட் ஸ்போர்ட் மாடலில் ஸ்போர்ட்ஸ் சீட் மற்றும் சிவப்பு நிற ஸ்டிட்ச், லெதர் ராப்டு ஃபிளாட்-பாட்டம் ஸ்டீரிங் வீ்ல், மற்றும் 7-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் பிளே மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.