செலவே இல்லாமல் ஜப்பானில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கவேண்டுமா?

செலவே இல்லாமல் ஜப்பானில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கவேண்டுமா?

+2 முடிச்சாச்சு. மார்க்கும் எடுத்தாச்சு. இன்ஜினியரிங்தான் படிக்க ஆசை. ஆனால், உலகத்தரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்க ஆசை என்றால் பணம் வேண்டுமே. கவலையை விடுங்க. காசே இல்லாம ஜப்பானிலேயே இன்ஜினியரிங் படிக்கலாம். 2016-ம் ஆண்டுக்கான ஜப்பான அரசு உதவித்தொகைத் திட்டம் துவங்கிவிட்டது. 1994-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 1999-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி வரை பிறந்தவர்கள் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் நடக்கும் தேர்வு மூலம் தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். 

 \"\"

மெக்கானிக்கல் உள்ளிட்ட இளங்கலைப் படிப்புகளுக்கு மொத்தம் 3 பேருக்கு மட்டுமே உதவித்தொகை வழங்க இருக்கிறது ஜப்பான் அரசு. 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 5 வருடங்களுக்கு இந்த உதவித்தொகை உண்டு. இதில், ஒரு வருடம் ஜப்பானிய மொழி கற்றுக்கொள்வதற்காக ஒதுக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் கற்றுக்கொடுக்கப்படும் படிப்புகளைத் தேர்ந்தெடுத்தால் ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ளத்தேவையில்லை. எனவே, அவர்களுக்கு 4 வருடங்கள்தான். படிப்பு காலம் முழுவதும் மாதத்துக்கு சுமார் 62,000 ரூபாய் உதவித்தொகை கொடுக்கப்படுகிறது. படிப்புக்காக கட்டணம் கிடையாது. ஜப்பான் சென்றுவருவதற்கான விமான டிக்கெட்  செலவுகளையும் ஜப்பான் அரசே ஏற்றுக்கொள்கிறது.   

ஜப்பானிய மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. 2016-ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். ஜூன் 17-ம் தேதிக்குள் கட்டாயம் விண்ணப்பித்துவிட வேண்டும். மேலும் தொடர்புக்கு கலாசாரம் மற்றும் தகவல் மையம், ஜப்பான் தூதரகம் சென்னை - 044-24323860-63   

மேலும் தகவல்களுக்கு https://www.in.emb-japan.go.jp/Education/japanese_government_scholarships.html

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.