ஜியோபோனிற்கு போட்டியாக மலிவு விலை ஸ்மார்ட்போன் வெளியிடும் பி.எஸ்.என்.எல்.

ஜியோபோனிற்கு போட்டியாக மலிவு விலை ஸ்மார்ட்போன் வெளியிடும் பி.எஸ்.என்.எல்.

இந்தியாவில் மலிவு விலை மொபைல் போன்களை உருவாக்க லாவா மற்றும் மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களுடன் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஒப்பந்தமிட்டுள்ளது. புதிய மொபைல் போன்களுடன் பி.எஸ்.என்.எல். வழங்கும் சிறப்பு சலுகைகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

\'பி.எஸ்.என்.எல். நிறுவனம் மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு மலிவு விலையில் சாதனங்களை வழங்க இருக்கிறது. மைக்ரோமேக்ஸ் மற்றும் லாவா நிறுவனங்கள் தயாரிக்கும் புதிய மொபைல் போன்களுடன் பி.எஸ்.என்.எல். சிம் கார்டு மூலம் பிரத்தியேக சலுகைகளை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.\' என பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஐதராபாத் மாவட்ட பொது மேளாலர் ராம்சந்த் தெரிவித்தார்.

\"\"

பி.எஸ்.என்.எல். நிறுவனம் சமீபத்தில் அறிவித்த ரூ.429 திட்டத்தில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 1 ஜிபி டேட்டா சுமார் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா பகுதிகளில் மட்டும் இதுவரை சுமார் 3.5 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் திட்டத்தில் இணைந்திருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரிலையன்ஸ் ஜியோபோன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு முதற்கட்ட விற்பனை நிறைவுற்று இருக்கிறது. 4ஜி தொழில்நுட்பம் கொண்டிருக்கும் ஜியோபோனுடன் மலிவு விலை சலுகைகளும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் பி.எஸ்.என்.எல். மட்டுமின்றி பாரதி ஏர்டெல், மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்களும் ஜியோபோனிற்கு போட்டியாக 4ஜி தொழில்நுட்பம் கொண்ட மலிவு விலை மொபைல் போன்களை விரைவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.