ஜியோபோன் விநியோகம் துவங்குகிறது

ஜியோபோன் விநியோகம் துவங்குகிறது

ஜியோபோன் முன்பதிவு செய்து ஆவலோடு காத்திருப்போருக்கு நற்செய்தி. ஜியோபோன் விநியோகம் இன்று (செப்டம்பர் 24) முதல் துவங்குகிறது. அதன்படி முதற்கட்டமாக ஜியோபோன்களை முன்பதிவு செய்த சுமார் 60 லட்சம் பேருக்கும் அடுத்த 15 நாட்களில் ஜியோபோன் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில் 4ஜி ஜியோபோன்களின் விநியோகம் ஊரக பகுதிகளில் துவங்கி அதன்பின் நகரங்களில் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர்மீடியா ஆய்வு நிறுவனத்தின் தகவல்களின் படி இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 6.18 கோடி மொபைல் போன்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 

அந்தவகையில் கிட்டத்தட்ட 60 லட்சம் முன்பதிவுகளை பெற்ற ஜியோபோன் நாட்டின் ஒட்டுமொத்த மொபைல் போன் விற்பனையில் 10 சதவிகிதி பங்குகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் ஜியோபோன் முன்பதிவு ஆகஸ்டு 24-ம் தேதி துவங்கியது. வாடிக்கையாளர்கள் திரும்பப் பெறக்கூடிய வகையில் முன்பணமாக ரூ.500 செலுத்தி ஜியோபோன்களை முன்பதிவு செய்தனர். மீதமுள்ள ரூ.1000 ஜியோபோன் விநியோகம் செய்யும் போது வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டது. 

\"\"

ஜியோபோன் வாங்க வாடிக்கையாளர்கள் செலுத்தும் ரூ.1,500 முன்பணத்தை மூன்று ஆண்டுகளுக்கு பின் திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என ஜியோ தெரிவித்துள்ளது. ஜியோபோனில் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்க ஜியோ செயலிகள் பிரீஇன்ஸ்டால் செய்யப்படும். இத்துடன் தொலைக்காட்சிகளுடன் இணைத்து வீடியோக்களை பார்க்கும் வசதியும் புதிய ஜியோபோன்களில் வழங்கப்பட்டுள்ளது.

ஜியோபோனுடன் ஜியோ மியூசிக், மைஜியோ, ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ எக்ஸ்பிரஸ் நியூஸ் மற்றும் பல்வேறு செயலிகளை இயக்க வழி செய்கிறது. கூடுதலாக ஸ்கிரீனினை பாஸ்வேர்டு, போட்டோ லாக், டார்ச்லைட், அவசர கால அழைப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.    

மேலும் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ், 300 எஸ்எம்எஸ், தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வாரத்திற்கு பயன்படுத்த சிறப்பு திட்டங்கள் ரூ.53க்கும், இரண்டு நாள் திட்டம் ரூ.23க்கும் வழங்கப்படுகிறது. தற்சமயம் புதிய ஜியோபோன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.