ஜியோவுடன் நேரடி போட்டி: விரைவில் இலவச வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்?

ஜியோவுடன் நேரடி போட்டி: விரைவில் இலவச வாய்ஸ் கால் வழங்கும் ஏர்டெல்?

ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து பாரதி ஏர்டெல் நிறுவனமும் வோல்ட்இ சேவைகளை சிலகாலமாக சோதனை செய்து வருகிறது. அந்த வகையில், வோல்ட்இ சேவைகளை விரைவில் துவங்க இருப்பதாகவும், இதன்கீழ் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாய்ஸ் கால்கள் அனைத்தும் வோல்ட்இ சேவைகளை கொண்டு மேற்கொள்ளப்பட இருக்கும் நிலையில் இவை 4ஜி டேட்டா நெட்வொர்க்கையே மேற்கொள்ளும் என்பதால் இவை இலவசமாக வழங்க முடியும். ஜியோ எதிர்கொள்ள திட்டமிடும் ஏர்டெல் வோல்ட்இ சேவைகளை வழங்கும் இரண்டாவது நிறுவனமாக ஏர்டெல் இருக்கும்.

வோல்ட்இ சேவைகளை சார்ந்த அழைப்புகள் முதற்கட்டமாக மும்பை நகரில் வழங்கப்படும் என்றும் அதன் பின் டெல்லி மற்றும் கொல்கட்டா போன்ற நகரங்களில் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முன்னதாக ஏர்டெல் நிறுவனம் வோல்ட்இ சேவைக்கான சோதனைகளை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

\"\"

புதிய தொழில்நுட்பமாக இருப்பினும் இந்தியாவில் வோல்ட்இ மிக குறைந்த காலக்கட்டத்தில் அதிக பிரபலமாகியுள்ளது. ஜியோ வரவு தான் இதற்கு முக்கிய காரணமாக கூற முடியும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் சேவைகளை துவங்கிய ரிலையன்ஸ் ஜியோ வழக்கமான ஜிஎஸ்எம் நெட்வொர்க்கை தவிர்த்து 4ஜி டேட்டாவை பயன்படுத்தி வாய்ஸ் கால்களை வழங்கியது. இதனை கொண்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ் கால்களை ஜியோ வழங்கி வருகிறது.

ஜியோ பயன்படுத்தி வரும் வோல்ட்இ தொழில்நுட்பம் இல்லாத நிலையில், ஏர்டெல் மற்றும் இதர போட்டி நிறுவனங்கள் ஜியோ போட்டியை சமாளிக்க முடியாமல் விலை குறைப்பு மற்றும் பழைய விலையில் அதிக சலுகைகளை வழங்க துவங்கின. 

முதற்கட்டமாக மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு வோல்ட்இ சேவைகளை தங்களது போன்களில் ஆக்டிவேட் செய்யக் கோரும் குறுந்தகவல்கள் அனுப்பப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. வோல்ட்இ சேவையை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போனில் பிரத்தியேக மென்பொருள் மற்றும் வன்பொருள் சப்போர்ட் இருக்க வேண்டும்.

\"\"

இந்தியாவில் பீச்சர் போன் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களை குறிவைத்து ஜியோ சமீபத்தில் ஜியோபோன் சாதனத்தை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கியது. ஸ்மார்ட்போன் போன்ற அம்சங்கள் நிறைந்த ஜியோபோனில் 4ஜி நெட்வொர்க் கொண்டு வாடிக்கையாளர்கள் வோல்ட்இ அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

அந்தவகையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏர்டெல் நிறுவனமும் ஜியோபோன் போன்ற வசதிகள் நிறைந்த 4ஜி பீச்சர்போன் ஒன்றை வெளியிடலாம் என கூறப்படுகிறது. ஜியோவுக்கு போட்டியாக வெளியிடப்படும் பட்சத்தில் புதிய ஏர்டெல் 4ஜி பீச்சர்போனின் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

வோல்ட்இ அழைப்புகளை மேற்கொள்ள உதவும் பீச்சர்போன்களை தயாரிக்க ஏர்டெல் நிறுவனம் மைக்ரோமேக்ஸ் அல்லது இன்டெக்ஸ் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த பீச்சர்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகவில்லை.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.