டவுன்லோடு வேகம்: தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் நிறுவனம்

டவுன்லோடு வேகம்: தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் நிறுவனம்

இந்தியாவில் மொபைல் டேட்டா டவுன்லோடு வேகத்தை வழங்கும் டெலிகாம் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்தின் மைஸ்பீடு செயலியின் ஆகஸ்டு மாத மொபைல் டேட்டா டவுன்லோடு வேகம் வழங்கிய நிறுவனங்ள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் பிடித்துள்ளது. 

மொபைல் டேட்டா டவுன்லோடு வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து மூன்று மாதங்களாக முன்னிலையில் இருந்து வருகிறது. ஆகஸ்டு மாத நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி டவுன்லோடு வேகம் 18.331 Mbps ஆக இருந்தது. இதுவே ஜூலை மாதத்தில் நொடிக்கு 18.654 Mbps ஆக இருந்தது. ரிலையன்ஸ் ஜியோவின் அதிகபட்ச டவுன்லோடு வேகம் 19.123 Mbps ஆகும், இது அந்நிறுவனம் மே மாதத்தில் வழங்கியது குறிப்பிடத்தக்கது. 

அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகம் முந்தைய மாதங்களில் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. இதேபோல் வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களின் 4ஜி டவுன்லோடு வேகங்களும் குறைந்துள்ளது. எனினும் பாரதி ஏர்டெல் நிறுவன வேகம் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது.

\"\"

ஆகஸ்டு மாதத்தில் 4ஜி டவுன்லோடு வேகம்:


ஆகஸ்டு மாத நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ டவுன்லோடு வேகம் 18.831 Mbps ஆக இருந்திருக்கிறது, இது வோடபோனின் 9.325 Mbps வேகத்தை விட இருமடங்கு அதிகமாகும். இரண்டாம் இடம் பிடித்துள்ள வோடபோன் முந்தைய மாதங்களில் 11.078Mbps வேகம் வழங்கியது. மூன்றாவது இடத்தில் இருக்கும் ஏர்டெல் 9.266Mbps வேகம் வழங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து ஐடியா செல்லுலார் வேகம் ஆகஸ்டு மாதத்தில் 8.833Mbps ஆக இருந்தது, முந்தைய மாதத்தில் ஐடியா வேகம் 9.464Mbps ஆக இருந்தது.

ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் முறையே 18.6Mbps, 11Mbps, 9.8Mbps மற்றும் 9Mbps வேகத்தை வழங்குகின்றன. எனினும் ஜியோ, வோடபோன், ஏர்டெல் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் சராசரியை விட அதிக வேகம் வழங்கியுள்ளன.

\"\"

ஆகஸ்டு மாதத்தில் அப்லோடு வேகம்:

இந்திய டெலிகாம் நிறுவனங்களின் அப்லோடு வேகத்தை பொருத்த வரை ஐடியா நிறுவனம் 6.292Mbps வேகத்தில் முதலிடம் பிடித்துள்ளது, இது முந்தைய ஜூலை மாதத்தில் 6.237Mbps ஆக இருந்தது. மற்ற மூன்று நிறுவனங்களும் 4ஜி அப்லோடு வேகங்கள் குறைந்துள்ளது. வோடபோன் நிறுவனம் இரண்டாவது இடத்தில் 5.782Mbps, ஜியோ மூன்றாவது இடத்தில் 4.225Mbps மற்றும் ஏர்டெல் நிறுவனம் 4.123Mbps வேகம் வழங்கியுள்ளன. 

ஜூலை மாதத்தில் வோடபோன், ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் முறையே 6.054Mbps, 4.512Mbps மற்றும் 4.565Mbps வரை வழங்கியுள்ளன. சீரான 4ஜி டவுன்லோடு வேகங்கள் வழங்கிய நிறுவனங்கள் பட்டியலில் ஐடியா 6.6Mbps, வோடபோன் 6.3Mbps வழங்கியுள்ளன. ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் 4.5Mbps மற்றும் 4.3Mbps வரை வழங்கியுள்ளன.

 

 
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.