டெஸ்டிங்கில் சிக்கிய ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட்

டெஸ்டிங்கில் சிக்கிய ஃபோர்டு ஃபிகோ ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட்

இந்தியாவில் சில கார்களை இந்த ஆண்டிற்குள் வெளியிட ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதில் ஃபோர்டு கிராஸ், ஃபிகோ ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஃபிகோ ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் உள்ளிட்ட மாடல்கள் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றன. கிராஸ்-வெர்ஷன் மாடல் இந்தியாவில் முதலில் வெளியிடப்பட இருக்கிறது.
 
இதைத் தொடர்ந்து மற்ற ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் வெளியிடப்பட இருக்கிறது. ஃபிகோ ஆஸ்பையர் என அழைக்கப்படும் செடான் மாடல் குஜராத் மாநிலத்தின் சனாத் பகுதியில் சோதனை செய்யப்படும் புகைப்படம் இணையத்தில் கசிந்திருக்கிறது. இப்பகுதியிலேயே ஃபோர்டு தயாரிப்பு ஆலை இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
 
தற்சமயம் சோதனை செய்யப்படும் மாடலில் வாகனத்தின் சில தகவல்கள் தெரியவந்துள்ளது. முன்பக்கம் ஹனிகொம்ப் கிரில், முன்பக்க பம்ப்பர் ட்வீக் செய்யப்பட்டு காரின் முன்பக்க முற்றிலும் அழகாக காட்சியளிக்கிறது. இதன் ஹெட்லேம்ப்களும் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
 
புகைப்படம்: நன்றி மோட்டார்பீம்
 
புதிய மாடலில் தற்போதைய கார்களில் டிரெண்ட் செட்டிங் அம்சங்களில் ஒன்றாக இருக்கும் டி.ஆர்.எல். இன்டகிரேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று பின்புற பூட் லிட் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் அலாய் வீல், பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டிருக்கிறது.
 
உள்புறத்தில் ஆஸ்பையர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் மேம்படுத்தப்பட்ட டேஷ்போர்டு, மிதக்கும் திரை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்புற அப்டேட்கள் சமீபத்திய இகோஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்டதை போன்று இருக்கலாம் என்றும், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
புதிய ஆஸ்பையர் மாடலில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் இன்ஜின் வழங்ப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய இன்ஜின் 1.5 லிட்டர் டிராகன் இன்ஜினை சார்ந்து உருவாக்கப்பட்டிருக்கலாம் ன எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் ஃபோர்டு இகேஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 1.5 லிட்டர் டீசல் இன்ஜினில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.