டெஸ்டிங்-இல் சிக்கிய பி.எம்.டபுள்யூ F750 GS

டெஸ்டிங்-இல் சிக்கிய பி.எம்.டபுள்யூ F750 GS

பி.எம்.டபுள்யூ தனது F700 GS மாடலை 2018-ம் ஆண்டு வாக்கில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில இந்த மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. 
 
இம்முறை வெளியாகியுள்ள தகவல்களில் F850 GS போன்றே புதிய மாடலில் சில மேம்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. முன்னதாக F850 GS மாடல் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 
 
புதிய அப்கிரேடுகளில் கூடுதலாக 50சிசி சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பைக்கின் செயல்திறன் அளவில் 15bhp அதிகரித்து மொத்தம் 90bhp-யாக அதிகரிக்கிறது. இது டிரையம்ப் டைகர் 800 மாடலில் வழங்கப்பட்டுள்ள 94bhp செயல்திறுக்கு அருகில் அமைந்துள்ளது.   
புதிய F750 GS மாடலின் சேசிஸ் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. புதிய மாடலில் அலுமினியம் ஃபிரேம் மற்றும் ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம் வழங்கப்பட்டுள்ளது. புதிய மற்றும் வளைந்த ஸ்விங்-ஆர்ம் மற்றும் ஸ்விட்ச் செய்யப்பட்ட சைடுகள், எக்சாஸ்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இதன் எரிபொருள் டேங்க் முழுமையாக மாற்றப்பட்டுள்ளது. 
 
இந்த ஆண்டு நடைபெற இருக்கும் EICMA மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் பி.எம்.டபுள்யூ. F750 GS சர்வதேச சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது.   
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.