தீ விபத்திற்கான பாதுகாப்பு வசதிகள்: கட்டாயம் வைத்திடுங்கள்

தீ விபத்திற்கான பாதுகாப்பு வசதிகள்: கட்டாயம் வைத்திடுங்கள்

அடுக்குமாடி கட்டிடங்களில் தீ விபத்து ஏற்பட்டு விட்டால், அதை எளிமையான முறையில் கையாளுவதற்கு, முன்கூட்டியே வைத்திருக்க வேண்டிய, பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் அவசியமானது.

கட்டிடங்களில் கடைபிடிக்க வேண்டிய தீ தடுப்பு வசதிகள் என்ன?
  • தீ விபத்து ஏற்பட்டால், மீட்புக்கு தீயணைப்புத் துறையின் லேடர் வாகனம் வந்து செல்லும் அளவுக்கு, பக்கவாட்டில் காலி இடம் இருக்க வேண்டும்.
  • அவசர காலங்களில், கட்டிடத்தில் உள்ளோர் உடனே வெளியேற, வெளிப்புறமாக தனி படிக்கட்டுகள் அமைத்திருக்க வேண்டும்.
  • கட்டிடத்தின் மேல் தளத்தில், தீ விபத்தின் போது பயன்படுத்த, பிரத்யேகமான தண்ணீர் தொட்டி அமைத்து, அதில் போதிய அளவு நீர் இருப்பினை வைக்க வேண்டும்.
  • ஒவ்வொரு தளத்திலும், தீ விபத்தின் போது தண்ணீரை பீய்ச்சி அடிப்பதற்கான, ஹோஸ் குழாய் வசதி இருக்க வேண்டும்.
  • அறைகள், நடைபாதைகளில் தீ விபத்து ஏற்பட்டால், அதை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைப்பதற்கான, ஸ்பிரிங்க்சர்கள் அமைப்பது அவசியம்.
  • அடுக்குமாடி கட்டடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனே எச்சரிக்கும், புகை கண்டுபிடிப்பான் கருவி அறைகள், நடைபாதைகளில் அமைக்க வேண்டும்.
  • கட்டிடத்தின் உயரம், 45 மீட்டருக்கு மேல் சென்றால், அவசர கால மீட்பு பணிகளுக்கு கட்டிடத்தின் மேல் பகுதியில், ஹெலிபேட் அமைக்கலாம்.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.