நாசா நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு விடுத்துள்ள சவால்!

நாசா நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு விடுத்துள்ள சவால்!

விண்வெளி தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் நாசா நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் சாவல் ஒன்றினை விடுத்துள்ளது.

தற்போது செவ்வாய் கிரகம் தொடர்பில் கடுமையான ஆராய்ச்சிகளை நாசா நிறுவனம் மேற்கொண்டு வரும் அதேவேளை, அங்கு மனிதர்களை குடியேற்றம் செய்யவும் எத்தனித்து வருகின்றது.

இந்நிலையில் எதிர்வரும் 2033ம் அளவில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்ளைக் குடியேற்ற வேண்டும் என்று அமெரிக்க அரசு நாசாவிற்கு சவால் விடுத்துள்ளது.

இதேவேளை 2030ம் ஆண்டளவில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்புவது தொடர்பிலான திட்ட வரைவு ஒன்றினை நாசா நிறுவனம் இவ் வருடம் டிசம்பர் முதலாம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் மற்றுமொரு ரோவர் விண்கலத்தினை 2020ம் ஆண்டளவில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி ஒக்சிஜன் வாயு தொடர்பிலான ஆய்வு ஒன்றினை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.