பங்குச் சந்தையில் தனி மனிதனுக்கு கிடைக்கும் லாபங்கள் என்ன?

பங்குச் சந்தையில் தனி மனிதனுக்கு கிடைக்கும் லாபங்கள் என்ன?

பங்குச் சந்தையில் நீண்ட காலத்துக்கு முதலீடு மேற்கொள்வதுதான் சரியான தீர்வாக இருக்கும் என்றில்லை. தினசரி வர்த்தகம், குறுகிய கால வர்த்தகம் மற்றும் நீண்ட கால முதலீட்டு முறையிலும் வர்த்தகம் மேற்கொள்ளலாம். இது முதலீட்டாளர்களின் மனநிலையைப் பொறுத்தது. 

ஆனால், `குறைந்தபட்சம் பத்து வருடங்கள் ஒரு பங்கை நீங்கள் வைத்திருக்க நினைக்கவில்லை எனில், அந்தப் பங்கை பத்து நிமிடம்கூட வைத்திருக்காதீர்கள்\' என்று சொல்கிறார் பங்குச் சந்தை ஜாம்பவான் வாரன் பஃபெட். ஏனெனில் பங்குச் சந்தையில் 5 ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு 5 லட்சத்தை இழப்பவரே அதிகம். இந்த நிலையில் பங்குச் சந்தையில் ஒரு தனிமனிதராக, நமக்கு என்ன லாபம் என்பது குறித்து எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனத்தின் தலைவர் ரா.அருள்ராஜனிடம் கேட்டோம்.

1. `பங்குச்சந்தை என்பது, ஒரு நிறுவனம் தனக்கு தேவையான முதலீட்டை பொதுமக்களிடம் இருந்து திரட்டுவதற்கு உதவும் தளம். நிறுவனங்களுக்கு அதிகமான முதலீடு கிடைக்கும்போது, அவர்கள் தங்கள் வியாபாரத்தை அதிகப்படுத்துவார்கள். அப்போது, உற்பத்தி செய்யும் தொழிற்சாலைக்கு அதிக ஆட்களை வேலைக்கு எடுக்க வேண்டும். தொழிற்சாலையில் டெக்னிக்கல் ஆட்களுக்கு வேலை வாய்ப்பு கூடுகிறது. அதை நிர்வகிக்கும் அலுவலகத்துக்கும் சரி ஆட்கள் தேவை. எனவே நிர்வாகம் செய்ய அட்மின் ஆட்களும், விற்பனை செய்ய விற்பனை பிரதிநிதிகளும் தேவை. பங்குச்சந்தையின் மூலம், நிறுவனங்கள் மூலதனத்தைத் திரட்டி, தங்கள் வியாபார எல்லைகளை விரிவுபடுத்துவதால், நாட்டில் வேலை வாய்ப்பு கூடுகிறது. இதை இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால், அப்போதுதான் நிறைய கம்பெனிகள், கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூவ்-க்கு வருவார்கள். நம்முடைய சகோதர சகோதரிகளுக்கும் வேலை கிடைக்கும்.

2. பொதுமக்களாகிய நம் கண்ணோட்டத்தில், பங்குச்சந்தை என்பது, நம்முடைய சேமிப்பின் ஒரு பகுதியை, வளர்ச்சிக்காக முதலீடு செய்யக்கூடிய இடம். வங்கியில் போட்டால் 7.5%  கிடைக்கும். வரக்கூடிய நாட்களில் வட்டிவிகிதம் குறையத்தான் வாய்ப்புள்ளது. இருந்தாலும் பாதுகாப்பு கருதி வங்கியில் போடலாம். அதுவும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான். இல்லையென்றால்,  பணவீக்கம் கூடும்போது, வங்கிமூலம் வரும் வட்டி வருமானமும் நமக்கு மதிப்பை கூட்டாது. சரி, அடுத்து,  வங்கியில் கிடைக்கும் பணத்தைவிட கூடுதலாக கிடைக்கக்கூடிய இடம் என்று பார்த்தால் தங்கத்தை சொல்லலாம். தங்கம் என்பது நீண்டகால முதலீட்டின் அடிப்படையில் பார்க்கும்போது 12% - 13% வருவதாக ஒரு கணக்கு உண்டு. அதிலும் முதலீடு செய்யலாம். ஆனால், பொதுவாக தங்கத்தில் முதலீடு என்பது, பணவீக்கத்தை ஈடுசெய்யக்கூடிய முதலீடாகவே பார்க்கப்படுகிறது. அப்படி எனில், பங்குச்சந்தையில் நமக்கு என்ன கிடைக்கும்?

\"பங்குச்3.  பங்குச்சந்தையில் முதலீடு என்பது, கடந்த 15 ஆண்டுகளில், சராசரியாக 15-20% வருமானத்தை இந்திய பங்குச்சந்தை கொடுத்துவருகிறது. வேறு எந்த இடத்தில் முதலீடு செய்தாலும், இதுபோன்று தொடர்ந்து வருமானம் கிடைப்பது அரிது. பங்குச்சந்தையில் முதலீடு செய்வதற்கும், மற்ற இடங்களில் முதலீடு செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. மற்ற இடங்களில் முதலீடு செய்யும்போது, வரக்கூடிய வருமானத்தைவிட கூடுதல் வருமானம்.  மற்றது, எப்போது வேண்டுமானலும் விற்று லாபத்தை வெளியே எடுக்கலாம். இது மிகவும் முக்கியமானது. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது என்பது நல்ல வருமானத்தைக் கொடுக்கும் என்று எடுத்துக்கொண்டாலும், எப்போது வேண்டுமானலும் விற்று பணத்தை வெளியே எடுக்கமுடியுமா? இது சற்று கடினமே. மேலும் ரியல் எஸ்டேட்டில் பணம் போடுவதாக இருந்தால், அதிக அளவில் பணம் தேவைப்படுகிறது. ஆனால், பங்குச்சந்தையில் முதலீடு செய்ய குறைந்த பணம் இருந்தாலே போதுமானது. ஏனெனில், பங்குகள் இப்போது எலக்ட்ரானிக் பங்குகளாக உள்ளன. இதனால், நாம் ஒரு பங்கு வாங்க வேண்டும் என்று நினைத்தால்கூட எளிதாக வாங்க முடியும்.

4.  பங்குச்சந்தையின் மூலம் அரசுக்கு என்ன லாபம்?  நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அதிகரிக்கும்போதும், அதை விற்கும்போதும், வரிகள் மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது, கூடுகிறது. இதனால், அரசும், பல்வேறு சமூகநலத் திட்டங்களை செயல்படுத்த முடியும். நாட்டில் உள்கட்டமைப்பை மேம்படுத்த முடியும்\' என்றவர், பங்குச் சந்தையில் ஒரு தனிமனிதராக, நமக்கு என்ன லாபம் என்பதையும் சொன்னார்.

வருமானவரியில் இருந்து விலக்கு 

நாம் பங்குச்சந்தையில் நல்ல பங்குகளை வாங்கி, ஒரு வருடம் கழித்து விற்றால், வரக்கூடிய லாபத்துக்கு வருமான வரியில் இருந்து முழுவதும் விலக்கு அளிக்கப்படுகிறது.  

கூடுதல் வருமானம் ஆனால் ரிஸ்க்கும் உண்டு 
    
பங்குச்சந்தையில் முதலீடு என்பது, கடந்த 15 ஆண்டுகளில், சராசரியாக 15-20% வருமானத்தை இந்திய பங்குச்சந்தை கொடுத்துவருகிறது. வேறு எந்த இடத்தில் முதலீடு செய்தாலும், இதுபோன்று தொடர்ந்து வருமானம் கிடைப்பது அரிது. ஆனாலும், வலிமையான நிறுவன பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யவேண்டும்.

பங்குகளை விற்று மீண்டும் பணமாக மாற்றுவது எளிது 

பங்குகளை வாங்குவதும் எளிது, அதேபோல் அதை விற்று பணமாக மாற்றுவதும் எளிது. பங்குகளை விற்ற இரண்டாவது வேலைநாளில் பணம் நம் கைக்கு எளிதாக வந்துவிடும்.

குறைவான பணத்திலும் பங்குச்சந்தையில் நுழையலாம் 

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய குறைந்த பணம் இருந்தாலே போதுமானது. ஏனெனில், பங்குகள் இப்போது எலக்ட்ரானிக் பங்குகளாக உள்ளன. இதனால், நாம் ஒரு பங்கு வாங்கவேண்டும் என்று நினைத்தால்கூட வாங்க முடியும்.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.