பட்ஜெட் விலையில் வெளியாகும் ஐபோன் X

பட்ஜெட் விலையில் வெளியாகும் ஐபோன் X

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் X ஸ்மார்ட்போன் கடந்த மாதம் விற்பனைக்கு வந்தது. வழக்கமான ஐபோன்களை போன்றே வரவேற்பு மற்றும் சர்ச்சைகளை கடந்து ஐபோன் X விற்பனையாகி வருகிறது. 

அந்த வகையில் ஆப்பிள் நிறுவனம் 5.8 இன்ச் OLED டிஸ்ப்ளே, 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் X மற்றும் 6.1 இன்ச் LCD  டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் X ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என கேஜிஐ செக்யூரிட்டீஸ் நிறுவத்தின் மிங்-சி-கௌ தெரிவித்தார்.

மூன்று ஐபோன் மாடல்களும் ஐபோன் X போன்றே ஃபுல் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, தலைசிறந்த வடிவமைப்பு மற்றும் ட்ரூ டெப்த் கேமரா கொண்டிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இத்துடன் 5.8 இன்ச் மாடலின் இன்ச் ஒன்றிற்கு 458 பிக்சல்கள் கொண்டிருக்கும் என்றும் இரண்டாம் தலைமுறை போன்களிலும் 1125x2436 ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார். இதன் 6.5 இன்ச் மாடலில் 480 - 500 PPI மற்றும் 6.1 இன்ச் மாடலில் 320 - 330PPI வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.



புதிய ஐபோன்களில் 6.1 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட மாடல் பட்ஜெட் ரக சந்தையில் உள்ள ஸ்மார்ட்போன்களை குறிவைத்து வெளியிடப்படும் என்றும் இதன் விலை 649 முதல் 749 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பர்க்கப்படுகிறது. எனினும் 6.5 இன்ச் கொண்ட ஐபோனின் விலை சார்ந்து கியோ ஆய்வில் எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. 

இரண்டாம் தலைமுறை ஐபோன் X மாடல் ஐபோன் X பிளஸ் என அழைக்கப்படலாம் என்றும் இவை அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என மிங்-சி-கியோ தெரிவித்துள்ளார். 

உலகின் பல்வேறு நாடுகளில் விற்பையாகி வரும் ஐபோன் X ஸ்மார்ட்போன் குளிர்ச்சியான சூழல் உள்ள பகுதிகளில் திரை இயங்காமலும், சில பகுதிகளில் ஐபோன் X டிஸ்ப்ளேவில் பச்சை நிற கோடு தென்படுவதாக சில வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இத்துடன் ஐபோன் X ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் 3D முறையில் உருவாக்கப்பட்ட முகமூடிகளே அன்லாக் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.