புதிய நிறத்தில் 2018 கே.டி.எம். டியூக் 390: இந்தியாவில் வெளியானது

புதிய நிறத்தில் 2018 கே.டி.எம். டியூக் 390: இந்தியாவில் வெளியானது

ஆஸ்த்ரியாவை சேர்ந்த கே.டி.எம். நிறுவனம் இந்தியாவில் 2018 டியூக் 390 மாடலை புதிய நிறம் மற்றும் சிறிய அப்டேட்களுடன் அறிமுகம் செய்துள்ளது. 
 
2018 கே.டி.எம். டியூக் 390 இந்தியாவில் ரூ.2.29 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் தலைமுறை கே.டி.எம். டியூக் 390 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய வடிவமைப்பு மற்றும் கூடுதல் அம்சங்களுடன் 2017 டியூக் 390 அறிமுகம் செய்யப்பட்டது. 
 
அந்த வகையில் 2018 கே.டி.எம். டியூக் 390 இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான இளஞ்சிவப்பு (ஆரஞ்சு) நிறம் மட்டுமின்றி புதிய டியூக் 390 வெள்ளை நிறத்திலும் கிடைக்கிறது. முந்தைய மாடலும் வெள்ளை நிறத்தில் சிலருக்கு மட்டும் விற்பனை செய்யப்பட்டு, பின் அவை தெரியாமல் விற்பனை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 
 
 
2018 கே.டி.எம். டியூக் 390 மாடலின் TFT இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே மேம்படுத்தப்பட்ட மென்பொருள் கொண்டு பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை வழங்குகிறது. மேலும் இந்த அப்டேட்டில் ஹெட்லைட் தானாக ஸ்விட்ச் ஆஃப் ஆகும் பிரச்சனை சரி செய்யப்பட்டிருக்கிறது. 
 
இன்ஜின் வெப்பத்தை எந்நேரமும் கட்டுப்பாட்டில் வைக்க ஏதுவாக 2018 மாடலில் வேகமான ரேடியேட்டர் ஃபேன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன்ஜின் வெப்பம் காலில் நேரடியாக தாக்காமல் இருக்க ஃபிரேமில் பிளேட் ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது. 2018 கே.டி.எம். டியூக் 390 மாடலில் 373.2சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 44 பி.எச்.பி. பவர், 37 என்.எம். டார்கியூ மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் கொண்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
 
புதிய டியூக் 390 மாடலில் முன்பக்கம் WP தலைகீழான ஃபோர்க், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்பக்க சக்கரத்தில் 320 மில்லிமீட்டர் டிஸ்க், பின்புறம் 230 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் மற்றும் ABS வசதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பின்புறம் ABS  ஸ்விட்ச் ஆஃப் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.