புதுவரவு: ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 டுவின் மற்றும் கான்டினென்டல் GT 650 டுவின்

புதுவரவு: ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 டுவின் மற்றும் கான்டினென்டல் GT 650 டுவின்

இத்தாலியில் நடைபெற்று வரும் EICMA மோட்டார் விழாவில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இன்டர்செப்டார் 650 டுவின் மற்றும் கான்டினென்டல் GT 650 டுவின் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இன்டர்செப்டார் மாடல் பார்க்க பழைய காலத்து கம்பீர தோற்றமும், கான்டினென்டல் GT 650 மாடல் முழுமையான கஃபே ரேசர் போன்ற தோற்றம் கொண்டுள்ளது. கான்டினென்டல் GT 535 மற்றும் கான்டினென்டல் GT 650 மாடல்கள் முற்றிலும் வித்தியமாசமானது. இரண்டு மாடல்களும் கிட்டத்தட்ட 5 சதவிகிதம் மட்டுமே ஒரே மாதிரியாக உள்ளது என ராயல் என்ஃபீல்டு தெரிவித்துள்ளது.



இதன் இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை 270 கோணத்தில் ஃபைரிங் ஆர்டர் மற்றும் ஏர்-கூல்டு, 648 சிசி பேரலெல்-டுவின் மோட்டார் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களை விட மென்மையான அதிர்வுகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு 650 சிசி பேரலெல் இன்ஜின் ப்ரோடோடைப்கள் மூன்று வித கிரான்க் செட்டப் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த இன்ஜின் 47 bhp மற்றும் 7,100 rpm செயல்திறன் மற்றும் 52Nm மற்றும் 4,000 rpm டார்கியூ கொண்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு இரண்டு மாடல்களும் முதலில் ஐரோப்பாவில் வெளியிடப்படும் என்றும் அதன்பின் மற்ற நாடுகளில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் ஏப்ரல் 2018-இல் வெளியாக இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு அரையாண்டிற்குள் வெளியிடப்பட இருக்கிறது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.