
போத்தி கேமரா அம்சம் கொண்ட நோக்கியா 7 ஸ்மார்ட்போன்: முழு தகவல்கள்
எச்எம்டி குளோபல் நிறுவனம் ஏற்கனவே அறிவித்ததை போன்று நோக்கியா 7 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா 8 ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டதை போன்ற அம்சங்கள் நிறைந்த நோக்கியா 7 ஸ்மார்ட்போன் 7000 சீரிஸ் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பின்புறம் கார்னிங் கொரில்லா கிளாஸ் கொண்டு பாதுகாக்கப்படுவதோடு 3D தெர்மோஃபார்மிங் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன்களில் போத்தி கேமரா மோட் கொண்ட F/1.8 அப்ரேச்சர் லென்ஸ் கொண்டுள்ளது. டூயல்-சைட் மோட் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்படும் இந்த அம்சம் ஒரே சமயத்தில் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமராக்களை பயன்படுத்தும். இதன் பில்ட்-இன் கேமரா ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் லைவ்-ஸ்டிரீமிங் செய்யும் வசதியும் கொண்டுள்ளது.
நோக்கியா 7 சிறப்பம்சங்கள்:
- 5.2 இன்ச் IPS 2.5D, 1080x1920 பிக்சல் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 பிராசஸர்
- 4 ஜிபி / 6 ஜிபி ரேம்
- 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.8 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்இடி பிளாஷ்
- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- ஸ்டாக் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட்
- யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
- 3000 எம்ஏஎச் பேட்டரி
- பின்புறம் கைரேகை ஸ்கேனர்
முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 7 விற்பனை அக்டோபர் 24-ம் தேதி முதல் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் 4 ஜிபி ரேம் கொண்ட மாடல் CNY 2,499 அதாவது இந்திய மதிப்பில் ரூ.25,000 மற்றும் 6 ஜிபி ரேம் கொண்ட மாடல் CNY 2,699 அதாவது இந்திய மதிப்பில் ரூ.26,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளில் விற்பனை குறித்து எவ்வித தகவலும் இல்லை. புதிய நோக்கியா 7 ஸ்மார்ட்போன் நோக்கியா OZO ஆடியோ தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளதால் 360 கோணத்தில் பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.