போயிங் 737 ரக விமானம் பறந்த நாள்: ஏப்.9- 1967

போயிங் 737 ரக விமானம் பறந்த நாள்: ஏப்.9- 1967

அமெரிக்காவின் முன்னணி விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், தனது 737 ரக விமானத்தை முதன்முதலாக 1967-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந்தேதி சேவைக்கு விட்டது.

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

1953 - வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான \"ஹவுஸ் ஒவ் வக்ஸ்\" (House of Wax) -ஐ வெளியிட்டது 1959 - மெர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது. 1991 - ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது.

1992 - முன்னாள் பனாமா அதிபர் மனுவேல் நொரியேகாவுக்கு ஐக்கிய அமெரிக்காவின் சமஷ்டி நீதிமன்றம் 30 ஆண்டுகால சிறைத்தண்டனை அளித்தது. 1999 - நைஜர் அதிபர் இப்ராகிம் மைனசாரா படுகொலை செய்யப்பட்டார். 2003 - ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

Tamiltech Author

TamilTech

Get the latest news, reviews, developments and trends in all Technology News including Gadgets, Science, Mobile, Internet, New Product Launches, Apps, Games, Creatives, Computing and Other Technology News in Tamil.