
போர்ஷ் வடிவமைப்பு கொண்ட ஹூவாய் மேட் 10 அறிமுகம்
ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள் ஜெர்மனியில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. போர்ஷ் வடிவமைப்பு கொண்ட மேட் 10 ஸ்மார்ட்போனில் 18:9 டிஸ்ப்ளே, மெல்லிய பெசல், ஆக்டாகோர் ஹைசிலிகான் கிரின் 970 பிராசஸர், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த எமோடிகான் UI 8.0 சார்ந்த இயங்குதளம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
டூயல் லெய்கா லென்ஸ் 12 எம்பி பிரைமரி கேமரா, 20 எம்பி மோனோகுரோம் சென்சார், பிரீமியம் வடிவமைப்பு கொண்டுள்ளது. பிரத்தியேக போர்ஷ் வடிவமைப்பு இன்டர்ஃபேஸ் கொண்டிருக்கிறது.
போர்ஷ் வடிவமைப்பு கொண்ட ஹூவாய் மேட் 10 சிறப்பம்சங்கள்:
- 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் எச்டி+ 18:9 ஃபுல் வியூ டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஹூவாய் கிரின் 970 பிராசஸர்
- 6 ஜிபி ரேம்
- 256 ஜிபி இன்டெர்னல் மெமரி
- ஹைப்ரிட் டூயல் சிம்
- ஆண்ட்ராய்டு 8.0 சார்ந்த EMUI 8.0
- டூயல் சிம் ஸ்லாட்
- 20 எம்பி + 12 எம்பி டூயல் கேமரா மற்றும் லெய்கா லென்ஸ்
- f/1.6 அப்ரேச்சர், டூயல்-டோன் LED flash, PDAF, 4K வீடியோ பதிவு செய்யும் வசதி
- 8எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 அப்ரேச்சர்
- கைரேகை ஸ்கேனர், இன்ஃப்ராரெட் சென்சார்
- வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP67) வசதி
- 4ஜி வோல்ட்இ, வைபை 802.11ac, ப்ளூடூத் 4.2 LE, GPS, NFC
- யு.எஸ்.பி. டைப்-சி
- 4000 எம்ஏஎ் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
போர்ஷ் வடிவமைப்பு கொண்ட ஹூவாய் மேட் 10 ஸ்மார்ட்போன் டைமண்ட் பிளாக் நிறம் கொண்டிருக்கிறது. நவம்பர் 20-ம் தேதி முதல் விற்பனைக்கு வரயிருக்கும் மேட் 10 விலை 1646 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,06,585 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.